விஸ்வரூப விற்பனை.. வெறும் ரூ.8,999-க்கு SONY கேமரா.. 5000mAh பேட்டரி.. 12GB ரேம்.. 18W சார்ஜிங்.. எந்த மாடல்?
அமேசான் பிரைம் டே 2025 (Amazon Prime Day 2025) விற்பனைக்கு முன்பு கிடைக்கும் எர்லி டீல்களில் (Early Deals) 12 ஜிபி ரேம், சோனி கேமரா, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி கொண்ட லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி (Lava Storm Play 5G) போனானது அடிமட்ட விலைக்கு கிடைக்கிறது. ஐடெல் ஜெனோ 10 (itel Zeno 10) மற்றும் டெக்னோ பாப் 9 5ஜி (Tecno Pop 9 5G) மாடல்களுக்கும் எர்லி டீல் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.
அமேசான் பிரைம் டே 2025 விற்பனையானது, ஜூலை 12ஆம் தேதி தொடங்குகிறது. ஜூலை 14ஆம் தேதி வரையில் நடக்கும் இந்த விற்பனையில் ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப் போன்ற பல்வேறு மாடல்களுக்கு அதிகப்படியான டிஸ்கவுண்ட் கிடைக்க இருக்கிறது. அதற்கு முன்பாகவே, எர்லி டீல்களில் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் மேலும், அடிமட்ட விலைக்கு கிடைக்க தொடங்கிவிட்டன.

லாவா ஸ்டார்ம் பிளே அமேசான் விற்பனை (Lava Storm Play 5G Amazon Sale): இந்த லாவா போனின் 6 ஜிபி ரேம் (6 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.9,999ஆக இருக்கிறது. இந்த விலையில் ரூ.999.90 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு மற்றும் எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ரூ.8,999 பட்ஜெட்டில் வாங்கலாம்.
6.75 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS), மீடியாடெக் டைமன்சிட்டி 7060 (MediaTek Dimensity 7060) சிப்செட் கிடைக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்752 (Sony IMX752) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. மேலும், 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கிறது.

ஐடெல் ஜெனோ 10 அமேசான் விற்பனை (itel Zeno 10 Amazon Sale): இந்த ஐடெல் போனில் 3 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.5,999ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் பிரைம் டே சேலின் எர்லி டீல்களின் டிஸ்கவுண்ட்டில் ரூ.200 விலை குறைப்பு மற்றும் ரூ.500 கூப்பன் டிஸ்கவுண்ட் போக ரூ.5,299 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதற்கு கார்டுகள் தேவையில்லை.
6.56 (1612 x 720 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்பிளே கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 14 கோ எடிஷன் (Android 14 Go Edition) மற்றும் ஹய்ஓஎஸ் 14 (HiOS 14) கொண்ட யுனிசோக் சிப்செட் கிடைக்கிறது. 8 எம்பி ரியர் கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ கேமரா கொடுக்கிறது. இந்த ஐடெல் ஜெனோ 10 போனில் 10W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது.

டெக்னோ பாப் 9 5ஜி அமேசான் விற்பனை (Tecno Pop 9 5G Amazon Sale): இந்த டெக்னோ போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.9,499 ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.1,600 நேரடி விலை குறைப்பு போக ரூ.7,899 பட்ஜெட்டில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது. இதற்கும் எந்த கார்டுகளும் தேவையில்லை. இதே விலையில் ஆர்டர் செய்ய முடியும்.
6.6 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்பிளே உள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6300 6nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 14ஓஎஸ் கிடைக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்582 சென்சாருடன் 48 எம்பி மெயின் கேமரா மற்றும் செகண்டரி லென்ஸ் கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. இந்த டெக்னோவில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி உள்ளது.


Click it and Unblock the Notifications








