ஊர் அலற.. வெறும் ரூ.8,999-க்கு 5G போன்.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. 12GB ரேம்.. 18W சார்ஜிங்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி (Lava Storm Play 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. மலிவான விலைக்கு 5000mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 12 ஜிபி ரேம் மற்றும் சோனி சென்சார் கேமரா போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி மாடலின் பீச்சர்கள், விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி அமேசான் விலை (Lava Storm Play 5G Amazon Price): இந்த லாவா ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் (6 ஜிபி விர்ச்சுவல்) + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.10,499ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.12,499ஆகவும் இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.999.90 பேங்க் டிஸ்கவுண்ட் போக ஆர்டருக்கு கிடைக்கிறது.

எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் இந்த டிஸ்கவுண்ட்டை பெற்று கொள்ளலாம். இதுபோக ரூ.500 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, 6 ஜிபி ரேம் வேரியண்ட்டை ரூ.8,999 பட்ஜெட்டிலும், 8 ஜிபி ரேம் வேரியண்ட்டை ரூ.10,999 பட்ஜெட்டிலும் ஆர்டர் செய்து கொள்ள முடியும். ரூ.12,499 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் இந்த போனுக்கு கிடைக்கிறது.
லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி அம்சங்கள் (Lava Storm Play 5G Specifications): இந்த லாவா ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7060 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7060 6nm) சிப்செட் வருகிறது. இந்த சிப்செட்டுக்கு ஏற்ப ஐஎம்ஜி பிஎக்ஸ்எம் 8 256 ஜிபியு (IMG BXM 8 256 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
6.75 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த வாட்டர் டிராப் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. மேலும், 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 750 பீக் பிரைட்ன்ஸ் மற்றும் 16.7 மில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி செகண்டரி கேமரா வருகிறது.

இந்த மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்752 (Sony IMX752) சென்சார் மற்றும் 2K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. இந்த லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி ஸ்மார்ட்போனில் 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவில் நைட் மோட் (Night Mode), ப்ரோ மோட் (Pro-Mode), குரூப் போட்டோ (Group Photo) மற்றும் யூஎச்டி (UHD) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன.
இந்த லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி ஸ்மார்ட்போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு டைப்-சி சார்ஜிங் போர்ட் சப்போர்ட் உள்ளது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கிடைக்கிறது. பாட்டம் போர்ட்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker) கொடுக்கப்பட்டுள்ளது. எஸ்டி கார்டு சிலாட் (SD Card Slot) உள்ளது.
சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் (Side-mounted Fingerprint) சென்சார் கொடுக்கிறது. மேலும், IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA) மற்றும் 4ஜி வோஎல்டிஇ (4G VoLTE) உள்ளது. வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) உள்ளது. ப்ளூ (Blue), டைட்டானியம் (Titanium) கலர்களில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








