பொளந்து கட்டப் போகுது.. வெறும் ரூ.15,000 பட்ஜெட்ல 50MP கேமரா.. ஜூன் 13-க்கு அப்புறம் இருக்கு.. எந்த மாடல்?
இந்தியாவின் லாவா நிறுவனமானது, ஒட்டுமொத்த சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களையும் தூக்கி சாப்பிடும்படியான டிசைன் மற்றும் பீச்சர்களுடன் பட்ஜெட் விலை மாடல்களை களமிறக்கி வருகிறது. இப்போது, பிரீமியம் லுக் கொடுக்கும்படியான டிசைனில் பட்ஜெட் விலையில் லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி (Lava Storm Play 5G) மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி போனின் வெளியீட்டு தேதி மற்றும் முக்கிய பீச்சர்கள் உறுதியாகி இருக்கின்றன. இதுகுறித்த முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் வரும் ஜூன் 13ஆம் தேதி லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி மற்றும் லாவா ஸ்டார்ம் லைட் 5ஜி (Lava Storm Lite 5G) ஆகிய மாடல்கள் வெளியாக இருக்கின்றன. இதை லாவா நிறுவனம், அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. இதில் லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி மாடலில் மீடியாடெக் டைமன்சிட்டி 7060 (MediaTek Dimensity 7060) சிப்செட் கிடைக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது.

அதேபோல லாவா ஸ்டார்ம் லைட் 5ஜி போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 (MediaTek Dimensity 6400) சிப்செட் கிடைக்க இருக்கிறது. அதேபோல அமோசான் விற்பனையில் (Amazon Sale) ஆர்டருக்கு வரும் என்பதும் உறுதியாகி இருக்கிறது. இரண்டு மாடல்களிலும், டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்க இருக்கிறது. அதேபோல 50 எம்பி மெயின் கேமரா வர இருக்கிறது.
லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி மாடலானது குளோசி டிசைனில் ஒயிட் மற்றும் பிளாக் கலரில் டூயல் டோன் டிசைன் கொடுக்கிறது. இதில் ஒயிட் கலரானது, கேமராவுக்கு அருகே கிடைக்கிறது. லாவா ஸ்டார்ம் லைட் 5ஜி போனானது, கோல்டன் கலரில் கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் மற்றும் விற்பனை விவரங்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும், ஏற்கனவே வெளியான லாவா ஸ்டார்ம் 5ஜி போனானது, ரூ.13,499 ஆரம்ப விலையில் வெளியானதால், இந்த மாடல்களும் ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் லாவா ஸ்டார்ம் லைட் 5ஜி போனானது, அதைவிட மலிவான பட்ஜெட்டில் வெளியாகவும் வாய்ப்புள்ளது.

இந்த லைட் 5ஜி மாடலின் பீச்சர்களும் மார்கெட்டில் கசிந்துள்ளன. ஆகவே, எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.78 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட ஆரம்ப வேரியண்ட் கிடைக்க இருக்கிறது. இந்த விவரங்கள் மட்டுமே இப்போதைக்கு கசிந்துள்ளன.
சொல்லப்போனால், லாவா நிறுவனத்தின் ஸ்டார்ம் சீரிஸில் லாவா ஸ்டார்ம் 5ஜி என்னும் ஒரேவொரு மாடல் மட்டுமே இப்போதைக்கு இருக்கிறது. இந்த மாடலும் 2023ஆம் ஆண்டு வெளியாகியது. ஆகவே, 2 ஆண்டுகளுக்கு பிறகே ஸ்டார்ம் சீரிஸ் போன்களில் இந்த ஸ்டார்ம் பிளே 5ஜி மற்றும் ஸ்டார்ம் லைட் 5ஜி ஆகிய 2 மாடல்கள் வெளியாக இருக்கின்றன.
லாவா ஸ்டார்ம் 5ஜி அம்சங்கள் (Lava Storm 5G Specifications): இந்த மாடலின் பீச்சர்களை தெரிந்து கொண்டால், என்னென்ன பீச்சர்கள் அடுத்துவரும் மாடல்களில் அப்கிரேட் செய்யப்பட்டு கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள முடியும். ஆகவே, இந்த மாடலின் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கிடைத்தது. அதேபோல ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அப்டேட் வந்தது.
ஆகவே, இப்போதைய மாடல்களில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் எதிர்பார்க்கலாம். 50 எம்பி மெயின் + 8 எம்பி அல்ட்ரா வைடு கிடைத்தது. இதேபோல கேமரா சிஸ்டம் வர இருக்கும் மாடல்களில் எதிர்பார்க்கலாம். 5000mAh பேட்டரி மற்றும் 33W சார்ஜிங் கிடைத்தது. இதில் அப்கிரேட்களுடன் லாவா ஸ்டார்ம் பிளே மற்றும் ஸ்டார்ம் லைட் மாடல்கள் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








