தூக்குங்கடா அந்த தங்கத்த.. ரூ.9,999 பட்ஜெட்ல 12GB ரேம்.. SONY கேமரா.. 5000mAh பேட்டரி.. 18W சார்ஜிங்.. மாடல்?
இந்திய மார்கெட்டில் இருக்கும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் பிரியர்கள் ஒட்டுமொத்த பேரும் மூக்கில் விரல் வைக்கும்படியான பட்ஜெட்டில் சோனி சென்சார் கேமரா, 12 ஜிபி ரேம், 5000mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி (Lava Storm Play 5G) வெளியாகி இருக்கிறது. பிரீமியம் லுக் கொடுக்கும்படி குளோசி பேக் டிசைனில் கிடைக்க இருக்கிறது. இந்த லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி போனின் பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ரூ.10,000 பட்ஜெட் செக்மெண்ட்டில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7060 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7060 6nm) சிப்செட் முதல் மாடலாக இந்த லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி களமிறங்கி இருக்கிறது. இதுபோக மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்752 (Sony IMX752) சென்சாரை கொடுக்கும் கேமரா பிரியர்களையும் தட்டித்தூக்கி இருக்கிறது. முழு பீச்சர்கள் எப்படி?

லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி அம்சங்கள் (Lava Storm Play 5G Specifications): இந்த லாலா போனில் 6 ஜிபி ரேம் (6 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.75 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது.
வாட்டர் டிராப் நட்ஜ் டிசைனில் செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7060 6என்எம் சிப்செட் மட்டுமல்லாமல், ஐஎம்ஜி பிஎக்ஸ்எம் 8 256 ஜிபியு (IMG BXM 8 256 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. இந்த கார்டு மூலம் பட்ஜெட்டுக்கு ஏற்பவே அவுட்புட் எதிர்பார்க்க முடியும். ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி போனில் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி செகண்டரி கேமரா கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்காதபடி சோனி ஐஎம்எக்ஸ்752 (Sony IMX752) சென்சார் கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ ஷூட்டர் பேக் செய்கிறது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் (Side-mounted Fingerprint) உள்ளது.

இதுபோக பேஸ் அன்லாக் (Face Unlock) மற்றும் பாட்டம் போர்ட்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom Ported Speaker) கிடைக்கிறது. டைப்-சி சார்ஜிங் (Type-C Charging), எஸ்டி கார்டு சிலாட் (SD Card Slot) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் கொடுக்கும்படி 18W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி கொண்ட பேக்கப் சிஸ்டம் கிடைக்கிறது.
5ஜி சிப்செட் கொண்டிருப்பதால், 5 எஸ்ஏ (5G SA) மற்றும் என்எஸ்ஏ (NSA) கனெக்டிவிட்டி வருகிறது. இதுபோக 4ஜி வோஎல்டிஇ (4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) மற்றும் ஜிபிஎஸ் (GPS) கனெக்டிவிட்டிகளும் கிடைக்கின்றன. ப்ளூ (Blue) மற்றும் டைட்டானியம் (Titanium) கலர்களில் ஆர்டருக்கு கிடைக்க இருக்கிறது. விலை எப்படி?
இந்த லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.9,999ஆக இருக்கிறது. ஜூன் 24ஆம் தேதி முதல் விற்பனை தொடங்க இருக்கிறது. அமேசான் விற்பனையில் (Amazon Sale) ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த பட்ஜெட்டுக்கு சிப்செட் மற்றும் கேமரா பீச்சர்கள் வொர்த்தாகவே கொடுக்கப்பட்டு இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








