மிரளுது விற்பனை.. ரூ.9,999 போதும்.. SONY கேமரா.. 12GB ரேம்.. 5000mAh பேட்டரி.. 18W ஃபாஸ்ட் சார்ஜிங்.. மாடல்?
ஒட்டுமொத்த சீன நிறுவனங்களையும் தூக்கி சாப்பிடும்படியான அடிமட்ட பட்ஜெட்டில் சோனி சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி, IP64 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ட் போன்ற பீச்சர்களை கொடுத்த லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி (Lava Storm Play 5G) போனின் விற்பனை தொடங்கிவிட்டது. மீடியாடெக் டைமன்சிட்டி 7060 கொண்ட மாடலாக விற்பனைக்கு கிடைக்கும் இந்த லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி போனின் விலை, பீச்சர்கள் இதோ.
லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி அம்சங்கள் (Lava Storm Play 5G Amazon Sale): இந்த லாவா போனின் 6 ஜிபி ரேம் (6 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.9,999ஆக இருக்கிறது. இந்த விலைக்கு விற்பனை தொடங்கி இருக்கிறது. 8 ஜிபி ரேம் (8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 256 ஜிபி கொண்ட மற்றொரு மாடல் இருக்கிறது. ஆனால், இதன் விற்பனை தொடங்கவில்லை.

ஆகவே, 6 ஜிபி ரேம் கொண்ட மாடலை மட்டும் இப்போது, ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி போனானது, பிரீமியம் லுக் கொடுக்கும்படி குளோசி பிஷினிங் கொடுக்கிறது. இந்த டிசைனில் ப்ரோஸ்டி ப்ளூ (Frosty Blue) அல்லது டியூன் டைட்டானியம் (Dune Titanium) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது. இப்போது, மற்ற பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி அம்சங்கள் (Lava Storm Play 5G Specifications): இந்த லாவா போனில் 6.75 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) வாட்டர் டிராப் டிஸ்பிளே (Water-Drop Display) கிடைக்கிறது. இந்த எல்சிடி (LCD) டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 16.7 மில்லியன் கலர் டெப்த் உள்ளது.
இதுபோக 750 நிட்ஸ் சன்லைட் பிரைட்னஸ் கிடைக்கிறது. 128 ஜிபி மெமரிக்கு அடுத்து 1 டிபிக்கான கூடுதல் ஸ்டோரேஜ் சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, டூயல் நானோ சிம் சிலாட் (Dual Nano SIM Slot) மட்டுமல்லாமல், மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) பெற்று கொள்ளலாம். இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்காதபடி ஓஎஸ் மற்றும் சிப்செட் பீச்சர்கள் வருகின்றன.

ஆகவே, இந்த லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7060 (Octa Core 6nm MediaTek Dimensity 7060) சிப்செட் வருகிறது. இந்த சிப்செட்டுக்கு ஏற்ப மீடியம் அவுட்புட் கொடுக்கும்படி ஐஎம்ஜி பிஎக்ஸ்எம் 8 256 ஜிபியு (IMG BXM 8 256 GPU) கிராபிக்ஸ் கார்டு பேக் செய்யப்பட்டு இருக்கிறது.
50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி செகண்டரி கேமரா கொண்ட டூயர் ரியர் கேமரா சிஸ்டம் மற்றும் 8 எம்பி செல்பீ ஷூட்டர் கொடுக்கிறது. மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்752 (Sony IMX752) சென்சார் மற்றும் 2K வீடியோ ரெக்கார்ட்டிங் கிடைக்கிறது. மேலும், நைட் மோட் (Night Mode), டூயல் வியூ மோட் (Dual-View Video), ஏஐ எமோஜி (AI Emoji), ப்ரோ மோட் (Pro Mode) பீச்சர்கள் உள்ளன.
ரூ.10,000 விலை கொண்ட மாடல்களில் கிடைப்பதை போலவே 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரியுடன் 8.3 எம்எம் தடிமன், 196 கிராம் எடை கொடுக்கிறது. யூடியூப் பேக்கிரவுண்ட் ஸ்ட்ரீம், பேஸ் அன்லாக், பேட்டரி சேவர் மோட் போன்ற ஸ்மார்ட் பீச்சர்களும் கிடைக்கின்றன. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ற மாடலாகவே தெரிகிறது.


Click it and Unblock the Notifications








