புதுசு வந்ததும் பழைய Lava மாடலுக்கு விலை குறைப்பு.. சோனி கேமரா.. ஆண்ட்ராய்டு 15 OS.. எந்த மாடல்?
இந்தியாவில் லாவா பிளே மேக்ஸ் (Lava Play Max) ஸ்மார்ட்போன் இன்று ரூ.12,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே உள்ள லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி (Lava Storm Play 5G) ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது பிளிப்கார்ட் தளத்தில் தற்போது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஸ்டார்ம் பிளே 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 18 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.10,949 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே ரூ.9,949 விலையில் வாங்கிவிட முடியும்.

லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி அம்சங்கள் (Lava Storm Play 5G Specifications): 6.75 இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி (LCD) டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1612 x 720 பிக்சல்கள் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
தரமான ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7060 6என்எம் சிப்செட் உடன் லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் ஐஎம்ஜி பிஎக்ஸ்எம் 8 256 ஜிபியு (IMG BXM 8 256 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் உள்ளது.
அதேபோல் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் இந்த லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் உடன் இந்த லாவா ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
50 எம்பி மெயின் சோனி ஐஎம்எக்ஸ்752 (Sony IMX752) கேமரா + 2 எம்பி செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த லாவா ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் (Side-mounted Fingerprint), பேஸ் அன்லாக் (Face Unlock), பாட்டம் போர்ட்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom Ported Speaker) கிடைக்கிறது. டைப்-சி சார்ஜிங் (Type-C Charging)) உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த போனில் உள்ளன.

5000mAh பேட்டரி உடன் லாவா பிளே மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 5ஜி,4ஜி வோஎல்டிஇ (4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), ஜிபிஎஸ் (GPS) உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) ஆதரவு இந்த போனில் உள்ளது. மேலும் ப்ளூ (Blue) மற்றும் டைட்டானியம் (Titanium) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications








