கியூ கட்டி விழுது ஆர்டர்.. ரூ.12,499-க்கு இப்படிப்பட்ட 5G போன்.. 50MP கேமரா.. 16GB ரேம்.. 18W பாஸ்ட் சார்ஜிங்!
லாவா (Lava) நிறுவனத்தின் ஸ்டார்ம் பிளே 5ஜி (Storm Play 5G) ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட் டிஸ்கவுண்ட் விலைக்கு வாங்க கிடைக்கிறது. 6 ஜிபி ரேம் மாடல் கிடைத்தாலும், 8 ஜிபி ரேம் விரும்பும் பிரியர்களுக்கு இது பக்கா ஆஃபராக இருக்கிறது. இந்த ஸ்டார்ம் பிளே 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை, தள்ளுபடி மற்றும் பீச்சர்களை பார்க்கலாம்.
6 ஜிபி ரேம் + 6 ஜிபி ரேம் கொண்ட மாடல் மட்டுமே முதலில் வெளியாகியது. இருப்பினும், 8 ஜிபி ரேம் மாடலுக்கு லாவா பிரியர்களிடையே எதிர்பார்ப்பு கிளம்பியது. இப்போது, 8 ஜிபி ரேம் (8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் அமேசான் (Amazon) தளத்தில் தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. 18 சதவீத டிஸ்கவுண்ட்டில் ரூ.12,499 விலைக்கு வாங்கலாம்.

கூடுதலாக, பேங்க் கிரெடிட் கார்டு தள்ளுபடி கிடைக்கும். அதேபோல ரூ.11,750 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் கிடைக்கிறது. இந்த லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி ஸ்மார்ட்போனை ப்ரோஸ்டி ப்ளூ (Frosty Blue) மற்றும் டியூன் டைட்டானியம் (Dune Titanium) ஆகிய 2 கலர்களில் வாங்கி கொள்ளலாம். மெட்டாலிக் ஃபிரேம் போல பிரீமியம் லுக் கொடுக்கிறது. கேமரா பம்ப் டூயல் டோன் கொடுக்கிறது.
லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி அம்சங்கள் (Lava Storm Play 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7060 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7060 6nm) சிப்செட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) அப்டேட் கிடைக்கிறது. மாலி ஜிபியுக்கு பதிலாக ஐஎம்ஜி பிஎக்ஸ்எம் 8 256 ஜிபியு (IMG BXM 8 256 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.
2K வீடியோ ரெக்கார்டிங் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி ஸ்மார்ட்போனில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கும் 6.75 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே உள்ளது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 750 பீக் பிரைட்ன்ஸ் கொடுக்கிறது.
மேலும், 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 16.7 மில்லியன் கலர் டெப்த் வருகிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி கிடைக்கிறது. 50 சதவீத சார்ஜ் 45 நிமிடங்களில் செய்து கொள்ளலாம். 120 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் செய்து கொள்ளலாம். 471 மணி நேரங்களுக்கு ஸ்டாண்ட் பை டைம் (Stand By Time) கொடுக்கிறது. டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது.
3.5 எம்எம் ஆடியோ ஜாக் உள்ளது. பாட்டம் போர்ட்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker) கிடைக்கிறது. இந்த லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி ஸ்மார்ட்போனுக்கு IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கொடுக்கப்படுகிறது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), 4ஜி வோஎல்டிஇ (4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802) மற்றும் ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) கனெக்டிவிட்டி உள்ளது.
இந்த லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி ஸ்மார்ட்போனுக்கு போர்ட்ராய்டு மோட் (Portrait Mode) நைட் மோட் (Night Mode), பியூட்டி மோட் (Beauty Mode), ப்ரோ மோட் (Pro-Mode), குரூப் போட்டோ (Group Photo), யூஎச்டி (UHD), டைம் லேப்ஸ் (Time Lapse), டுயல் வியூ வீடியோ (Dual View Video) போன்ற கேமரா பீச்சர்கள் கிடைக்கின்றன. இந்த பட்ஜெட்டில் பக்கா தேர்வாக இந்த லாவா இருக்கிறது.


Click it and Unblock the Notifications








