பொளக்குது விற்பனை.. ரூ.10,499-க்கு LAVA 5G போன்.. SONY கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
இந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான லாவா மொபைல்ஸ் (Lava Mobiles) பிரீமியம் டிசைன் கொண்ட ஸ்மார்ட்போன்களை பட்ஜெட்டில் அறிமுகம் செய்து வருகிறது. இதில் மிகப்பெரும் வரவேற்பை பெற்ற லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி (Lava Storm Play 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலைக்கு கிடைத்து, நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்போது, அமேசானில் 22 சதவீத தள்ளுபடியுடன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.10,499 விலைக்கு வாங்கலாம். மேலும், குறிப்பிட்ட பேங்க் கார்டுகளுக்கும் தள்ளுபடி கிடைக்கிறது. ப்ரோஸ்டி ப்ளூ (Frosty Blue), டியூன் டைட்டானியம் (Dune Titanium) கலர்களில் இந்த லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.

லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி அம்சங்கள் (Lava Storm Play 5G Specifications): 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.75 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. 2.5D டிசைனில் பிரீமியம் பீல் கொடுக்கிறது. மேலும், மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்டுள்ளது.
260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 16.7M கலர் டெப்த் கொண்ட டிஸ்பிளேவாக இருக்கிறது. ஐஎம்ஜி பிஎக்ஸ்எம் 8 256 ஜிபியு (IMG BXM 8 256 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட 6என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7060 (6nm Octa Core MediaTek Dimensity 7060) சிப்செட் வருகிறது. மேலும், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுக்கப்பட்டு உள்ளது.
1 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) அப்டேட் பெற்று கொள்ளலாம். இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாதபடி 50 எம்பி மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்752 (Sony IMX752) சென்சார் கிடைக்கிறது. மேலும், 2 எம்பி டெப்த் கேமராவுடன் டூயல் ரியர் கேமரா கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ கேமரா உள்ளது.
ரியர் கேமராவுக்கு 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. நைட் (Night), எச்டிஆர் (HDR), ஃபிலிம் (Film) மற்றும் போர்ட்ராய்டு (Portrait) உள்ளிட்ட ப்ரோ (Pro) உள்ளிட்ட கேமரா மோட்களை இந்த லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி கொடுத்துள்ளது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5000mAh பேட்டரி கிடைத்து உள்ளது. டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் கொண்ட மாடலாக இருக்கிறது.
ஸ்லிம் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு இது ஏற்ற மாடலாக இருக்காது. ஏனென்றால், 5000mAh பேட்டரியுடன் 8.3 எம்எம் தடிமன் கொண்டுள்ளது. மேலும், 196 கிராம் எடை கிடைக்கிறது. இதில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை எதிர்பார்க்க முடியாது, ஆகவே, பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker) மட்டுமே கிடைக்கும். அதேபோல இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிண்ட் கிடையாது.
இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப சைடு-மவுண்டெட் ஃபிங்கப்ரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு உள்ளது. IP64 ரேட்டிங்குடன் டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) இந்த லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது. டைப்-சி ஆடியோ கிடையாது, பழைய மாடல்களில் கிடைக்கும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) உள்ளது.


Click it and Unblock the Notifications








