Home
Mobile

மிரளுது ஆர்டர்.. வெறும் ரூ.7,249 போதும்.. 5000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 15W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

2025ஆம் ஆண்டுக்கான அமேசான் ஃப்ரீடம் சேலில் (Amazon Freedom Sale) 50 எம்பி சோனி சென்சார் கேமரா, 5000mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட லாவா ஸ்டார்ம் லைட் 5ஜி (Lava Storm Lite 5G) போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. இந்த அடிமட்ட பட்ஜெட்டில் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 சிப்செட் மட்டுமல்லாமல், பிரீமியம் லுக் கொடுக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு என்னென்ன பீச்சர்களை இதில் எதிர்பார்க்கலாம், ஓஎஸ் எப்படி உள்ளிட்ட விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

சோனி ஐஎம்எக்ஸ்752 (SONY IMX752) சென்சாருடன் அடிமட்ட விலைக்கு கிடைக்கும் மாடலாக இந்த லாவா ஸ்டார்ம் லைட் 5ஜி இருப்பதால், விற்பனையில் பின்னியெடுக்கிறது. அதேபோல 1 டிபிக்கான மெமரி சப்போர்ட் மற்றும் 4 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. முழு பீச்சர்களை பார்ப்பதற்கு முன்பாக விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

மிரளுது ஆர்டர்.. வெறும் ரூ.7249 போதும்.. 5000mAh பேட்டரி.. 50MP கேமரா!

இந்த லாவா ஸ்டார்ம் லைட் 5ஜி போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.7,999ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் ஃப்ரீடம் சேலில் ரூ.750 உடனடி டிஸ்கவுண்ட் போக ஆர்டர் செய்ய கிடைக்கிறது. ஆகவே, ரூ.7,249 பட்ஜெட்டில் வாங்கி கொள்ள முடியும். ஈஎம்ஐ ஆப்ஷனில் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு ரூ.7,398 தள்ளுபடி கிடைக்கிறது.

மேலும், ரூ.7,550 மதிப்பில் பழைய ஸ்மார்ட்போன்களுக்கு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கிடைக்கிறது. இந்த பேங்க் டிஸ்கவுண்ட்டை பெறுவதற்கு எஸ்பிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஆர்டர் செய்ய வேண்டும். ரூ.750 டிஸ்கவுண்ட் என்பதை குறைவாக தோன்றலாம். ஆனால், இந்த போனின் விலையே ரூ.7,999ஆக இருக்கும்போது, இது மதிக்கக்கூடிய டிஸ்கவுண்ட் என்பதில் சந்தேகமில்லை.

லாவா ஸ்டார்ம் லைட் 5ஜி அம்சங்கள் (Lava Storm Lite 5G Specifications): இந்த லாவா போனில் 2K வீடியோ ரெக்கார்டிங் மட்டுமல்லாமல், போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), ப்ரோ வீடியோ மோட் (Pro Video Mode), டூயல் வியூ வீடியோ (Dual View Video), ஸ்லோவ் மோஷன் (Slow Motion) மற்றும் குரூப் போட்டோ (Group Photo) போன்ற பீச்சர்களுடன் 50 எம்பி மெயின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

முன்பே சொன்னதை போல சோனி ஐஎம்எக்ஸ்752 சென்சாருடன் கிடைக்கிறது. மேலும், செகண்டரி சென்சார் சப்போர்ட் கொடுக்கிறது. 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. சோனி சென்சார் மட்டுமல்லாமல், இந்த பட்ஜெட் செக்மெண்ட்டில் முதல்முறையாக ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6400 6nm) சிப்செட் கொடுத்து இருக்கிறது.

அதேபோல லேட்டஸ்ட் யுஐ அனுபவத்தை கொடுக்கும்படி ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) வருகிறது. 6.75 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கிறது. மேலும், எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன், 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 16.7 மில்லியன் கலர் டெப்த் கொடுக்கிறது. இந்த விலைக்கு 10W சார்ஜிங் மட்டுமே எதிர்பார்க்க முடியும்.

ஆனால், இந்த லாவா ஸ்டார்ம் லைட் 5ஜி போனில் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆஸ்ட்ரல் ப்ளூ (Astral Blue) மற்றும் காஸ்மிக் டைட்டானியம் (Cosmic Titanium) ஆகிய கலர்களில் பிரீமியம் பீல் கொடுக்கிறது. சைடு-பிங்கர்பிரிண்ட், பாட்டம்-போர்டெட் ஸ்பீக்கர், டைப்-சி சார்ஜிங், 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் மற்றும் IP64 ரேட்டிங் ரெசிஸ்டன்ட் கொடுக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Storm Lite 5G With 50MP Camera Available For Rs 7249 in Amazon Freedom Sale 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X