அடிமட்ட ரேட்ல 5G போன்.. வெறும் ரூ.7999 போதும்.. 50MP சோனி கேமரா.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
சீன நிறுவனங்களுக்கு நிகரான அடிமட்ட பட்ஜெட்டில் இந்தியாவின் லாவா நிறுவனமானது, நம்ப முடியாத பீச்சர்களுடன் லாவா ஸ்டார்ம் லைட் 5ஜி (Lava Storm Lite 5G) போனை களமிறக்கி இருக்கிறது. ரூ.10,000 பட்ஜெட்டைவிட மலிவான விலைக்கு 50 எம்பி கேமரா, 5000mAh பேட்டரி, 15W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 6400 6என்எம் சிப்செட் கொண்ட இந்த லாவா ஸ்டார்ம் லைட் 5ஜி போனின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்கள் இதோ.
ஐடெல், ரியல்மி, ரெட்மி போன்ற நிறுவனங்களை போலவே ரூ.10,000 பட்ஜெட்டைவிட கம்மியான விலைக்கு 5ஜி போன்களை லாவா நிறுவனமும் களமிறக்க தொடங்கி இருக்கிறது. இப்போது, லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி (Lava Storm Play 5G) மற்றும் லாவா ஸ்டார்ம் லைட் 5ஜி மாடல்களை வெளியிட்டுள்ளது. இதில் ஸ்டார்ம் லைட் 5ஜி மாடலானது, ரூ.8,000 பட்ஜெட்டில் கிடைக்க இருக்கிறது.

லாவா ஸ்டார்ம் லைட் 5ஜி அம்சங்கள் (Lava Storm Lite 5G Specifications): இந்த லாவா போனின் சிப்செட் மற்றும் கேமரா பீச்சர்கள் பட்ஜெட்டில் எதிர்பார்க்காதவையாக இருக்கின்றன. ஏனென்றால், அடிமட்ட பட்ஜெட்டில் ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 (Octa Core 6nm MediaTek Dimensity 6400) சிப்செட் மட்டுமல்லாமல், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) வருகிறது.
அதேபோல 50 எம்பி மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்752 (Sony IMX752) சென்சார் கிடைக்கிறது. இதுபோக செகண்டரி சென்சார் மற்றும 8 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இந்த லாவா ஸ்டார்ம் லைட் 5ஜி போனில் 4 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் (4G Virtual RAM) கிடைக்கிறது. 64 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் கிடைக்க இருக்கின்றன.
அடிமட்ட பட்ஜெட்டில் கிடைப்பதால், ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. வாட்டர் டிராப் நட்ஜ் டிசைன் கொண்ட 6.75 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. பேஸ் அன்லாக் (Face Unlock), சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Fingerprint Sensor) கிடைக்கிறது.

இந்த லாவா ஸ்டார்ம் லைட் 5ஜி போனில் 5000mAh பேட்டரி மற்றும் அந்த பேட்டரிக்கு 15W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported Speaker), 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port) மற்றும் எஸ்டி கார்டு சிலாட் (SD Card Slot) கிடைக்கிறது. அதேபோல டூயல் சிம் சிலாட் (Dual SIM Slot) வருகிறது.
பிரீமியம் குளோசி லுக்கில் அஸ்ட்ரல் ப்ளூ (Astral Blue) மற்றும் காஸ்மிக் டைட்டானியம் (Cosmic Titanium) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்ய முடியும். இந்த லாவா ஸ்டார்ம் லைட் 5ஜி போனின் ஆரம்ப விலை ரூ.7,999ஆக மட்டுமே இருக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. வரும் ஜூன் 19ஆம் தேதி முதல் ஆர்டர் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








