செம ஆஃபர்.. லாவா 5ஜி போனை கம்மி விலையில் வாங்க சரியான நேரம்.. சோனி கேமரா.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் லாவா ஸ்டார்ம் லைட் 5ஜி (Lava Storm Lite 5G) தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் டைமன்சிட்டி சிப்செட், ஐபி64 ரேட்டிங், 50எம்பி கேமரா உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
அமேசான் தளத்தில் 4ஜிபி ரேம் (4ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 64ஜிபி மெமரி கொண்ட லாவா ஸ்டார்ம் லைட் 5ஜி மாடலுக்கு 23 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.8,498 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 10 சதவீதம் தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

லாவா ஸ்டார்ம் லைட் 5ஜி அம்சங்கள் (Lava Storm Lite 5G Specifications): 6.75 இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி (LCD) டிஸ்பிளே உடன இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட்,1612 x 720 பிக்சல்கள், 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 16.7 மில்லியன் கலர் டெப்த் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.
ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6400 6nm) சிப்செட் உடன் லாவா ஸ்டார்ம் லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.
ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS)மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor)வசதியுடன் இந்த லாவா 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது.
IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட்(Dust & Water Resistant)உடன் லாவா ஸ்டார்ம் லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் பாட்டம்-போர்டெட் ஸ்பீக்கர், டைப்-சி சார்ஜிங், 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட வசதிகளும் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
50எம்பி சோனி ரியர் கேமரா உடன் லாவா ஸ்டார்ம் லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இதில் உள்ளது. போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), ப்ரோ வீடியோ மோட் (Pro Video Mode), டூயல் வியூ வீடியோ (Dual View Video), ஸ்லோவ் மோஷன் (Slow Motion) மற்றும் குரூப் போட்டோ (Group Photo) போன்ற பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது இந்த லாவா ஸ்டார்ம் லைட் 5ஜி ஸ்மார்ட்போன். பின்பு ஆஸ்ட்ரல் ப்ளூ (Astral Blue) மற்றும் காஸ்மிக் டைட்டானியம் (Cosmic Titanium) ஆகிய நிறங்களில் இந்த போன் வாங்க கிடைக்கும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications