Home
Mobile

யாருமே எதிர்பார்க்கல.. ரூ.6999 பட்ஜெட்ல ஐபி64 ரேட்டிங்.. 50எம்பி கேமரா.. ஆஃபரில் 5ஜி போன்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் லாவா ஸ்டார்ம் லைட் 5ஜி (Lava Storm Lite 5G) ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஐபி64 ரேட்டிங், 50எம்பி கேமரா, டைமன்சிட்டி சிப்செட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த லாவா போன் வெளிவந்துள்ளது இப்போது லாவா ஸ்டார்ம் லைட் 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

தற்போது அமேசான் தளத்தில் லாவா ஸ்டார்ம் லைட் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலுக்கு 27 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.7,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.6,999 விலையில் வாங்கிவிட முடியும்.

யாருமே எதிர்பார்க்கல.. ரூ.6999 பட்ஜெட்ல ஐபி64 ரேட்டிங்.. எந்த மாடல்?

லாவா ஸ்டார்ம் லைட் 5ஜி அம்சங்கள் (Lava Storm Lite 5G specifications): 6.75-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த லாவா ஸ்டார்ம் லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1612 x 720 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போன் சிறந்த டிஸ்பிளே அனுபவத்தை வழங்கும்.

அதேபோல் ஆக்டா கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 (Octa Core 6nm MediaTek Dimensity 6400) சிப்செட் வசதியுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். பின்பு கேமிங் பயனர்களை கவரும் வகையில் ஆர்ம் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Arm Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த போனில் உள்ளது.

50 எம்பி சோனி ஐஎம்எக்ஸ்752 (Sony IMX752) மெயின் சென்சார் + செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த லாவா போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது.

4 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் (4G Virtual RAM) மற்றும் 64ஜிபி மெமரி வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

யாருமே எதிர்பார்க்கல.. ரூ.6999 பட்ஜெட்ல ஐபி64 ரேட்டிங்.. எந்த மாடல்?

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS)மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும். IP64 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance), பேஸ் அன்லாக் (Face Unlock), சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Fingerprint Sensor) வசதிகளும் இந்த போனில் உள்ளன.

5000mAh பேட்டரி மற்றும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த போனில் உள்ளது. அதேபோல் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported Speaker), 3.5 எம்எம் ஆடியோ ஜாக், டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port) போன்ற வசதிகள் இந்த போனில் உள்ளன. பின்பு அஸ்ட்ரல் ப்ளூ (Astral Blue) மற்றும் காஸ்மிக் டைட்டானியம் (Cosmic Titanium) நிறங்களில் இந்த போனை வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Lava Storm Lite 5G is available at discounted price on Amazon: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X