அமேசான் குடியரசு தின விற்பனை.. ரூ.8.499 பட்ஜெட்ல 5ஜி போன்.. சோனி கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் 2026 (Amazon Great Republic Day Sale 2026) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதேபோல் மிகவும் அதிகம் எதிர்பார்த்த லாவா 5ஜி போன் ஒன்று தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
அதாவது அமேசான் தளத்தில் தற்போது நடைபெறும் சிறப்பு விற்பனையில் லாவா ஸ்டார்ம் லைட் 5ஜி (Lava Storm Lite 5G) ஸ்மார்ட்போனுக்கு 18 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.8,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.500 கூப்பன் சலுகையும் உள்ளது. ஆகவே இந்த போனை ரூ.8499 விலையில் வாங்கிவிட முடியும்.

லாவா ஸ்டார்ம் லைட் 5ஜி அம்சங்கள் (Lava Storm Lite 5G Specifications): சக்திவாய்ந்த ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6400 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6400 6nm) சிப்செட் உடன் லாவா ஸ்டார்ம் லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.
அதேபோல் 6.75 இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி (LCD) டிஸ்பிளே உடன இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட்,1612 x 720 பிக்சல்கள், 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 16.7 மில்லியன் கலர் டெப்த் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.
குறிப்பாக ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor)வசதியுடன் இந்த லாவா 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது.
லாவா ஸ்டார்ம் லைட் 5ஜி ஸ்மார்ட்போன் IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட்(Dust & Water Resistant) உடன் வெளிவந்துள்ளது. அதேபோல் பாட்டம்-போர்டெட் ஸ்பீக்கர், டைப்-சி சார்ஜிங், 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட வசதிகளும் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

அதுவும் 50எம்பி சோனி ரியர் கேமரா உடன் லாவா ஸ்டார்ம் லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இதில் உள்ளது. போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), ப்ரோ வீடியோ மோட் (Pro Video Mode), டூயல் வியூ வீடியோ (Dual View Video), ஸ்லோவ் மோஷன் (Slow Motion) மற்றும் குரூப் போட்டோ (Group Photo) போன்ற பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
மேலும் 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது இந்த லாவா ஸ்டார்ம் லைட் 5ஜி ஸ்மார்ட்போன். பின்பு ஆஸ்ட்ரல் ப்ளூ (Astral Blue) மற்றும் காஸ்மிக் டைட்டானியம் (Cosmic Titanium) ஆகிய நிறங்களில் இந்த போன் வாங்க கிடைக்கும். 4ஜிபி ரேம் (4ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 64ஜிபி மெமரி ஆதரவு கொண்டுள்ளது இந்த லாவா போன். கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.


Click it and Unblock the Notifications








