சைலண்ட் மோடில் சீன கம்பெனிகள்.. பட்ஜெட் விலையில் புதிய 5ஜி போனை கொண்டுவரும் இந்திய நிறுவனம்.. எந்த மாடல்?
சீன நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது இந்திய நிறுவனமான லாவா. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் லாவா நிறுவனம் விரைவில் அசத்தலான 5ஜி போனை அறிமுகம் செய்ய உள்ளது.
அதாவது தற்போது வெளியான தகவலின்படி, இந்தியாவில் வரும் டிசம்பர் 21-ம் தேதி லாவா ஸ்ட்ராம் 5ஜி (Lava Storm 5G) எனும் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது லாவா நிறுவனம். குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

அதேபோல் அமேசான் தளத்தில் தான் லாவா ஸ்ட்ராம் 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்குக் கொண்டுவரப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது வெளியான டீசரில், எல்இடி பிளாஷ் ஆதரவுடன் கூடிய டூயல் ரியர் கேமரா, சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) போன்றவை இந்த லாவா ஸ்ட்ராம் 5ஜி போனில் உள்ளன.
அதேபோல் பச்சை நிறத்தில் இந்த புதிய லாவா ஸ்ட்ராம் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த லாவா ஸ்ட்ராம் 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

லாவா ஸ்ட்ராம் 5ஜி அம்சங்கள்: மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் (Dimensity 6100+) சிப்செட் வசதியுடன் இந்த லாவா ஸ்ட்ராம் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு மாலி-ஜி57 ஜிபியு (Mali-G57 GPU)கிராபிக்ஸ் கொண்டிருக்கிறது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
எனவே கேமிங் பயனர்கள் இந்த லாவா ஸ்ட்ராம் 5ஜி ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். பின்பு 5000எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 50எம்பி டூயல் ரியர் கேமரா, 13எம்பி செல்பி கேமரா, ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் ரூ.15,000-க்குள் இந்த லாவா ஸ்ட்ராம் 5ஜி போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த லாவா யுவா 3 ப்ரோ (Lava Yuva 3 Pro) ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம். அதாவது ஆக்டா கோர் யுனிசோக் டி616(Octa-core UNISOC T616) சிப்செட் கொண்டுள்ளது இந்த போன். மேலும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்(Android 13 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது.

6.5 இன்ச் பன்ச் ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display) கொண்டுள்ளது இந்த லாவா யுவா 3 ப்ரோ போன். மேலும் 1600 x 720 பிக்சல்கள், 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 260 பிபிஐ மற்றும் 16 மில்லியன் கலர் சப்போர்ட் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. அதேபோல் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி உடன் இந்த போன் வெளிவந்துள்ளது.
குறிப்பாக 50எம்பி டூயல் ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000எம்ஏஎச் பேட்டரி, சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Fingerprint Sensor),பேஸ் அன்லாக் (Face Unlock) சப்போர்ட், 3.5 எம்எம் ஆடியோ ஜாக், சிங்கிள் போர்டெட் ஸ்பீக்கர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் லாவா யுவா 3 ப்ரோ போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போனின் விலை ரூ.8,999-ஆகும்.


Click it and Unblock the Notifications








