லாவா அறிமுகம் செய்த புதிய 4ஜி போன்.. 5000எம்ஏஎச் பேட்டரி.. எல்சிடி டிஸ்பிளே.. எந்த மாடல்?
லாவா நிறுவனம் தனது புதிய லாவா ஸ்மார்ட் 4 (Lava Smart 4)போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. எல்சிடி டிஸ்பிளே, 5000எம்ஏஎச் பேட்டரி, யுனிசாக் சிப்செட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த லாவா ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. இப்போது லாவா ஸ்மார்ட் 4 போனின் சிறப்பு அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
லாவா ஸ்மார்ட் 4 அம்சங்கள் (Lava Smart 4 Specifications): 6.56-இன்ச் எச்டி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் புதிய லாவா ஸ்மார்ட் 4 மாடல் வெளியாகி உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 16.7 மில்லியன் கலர்ஸ், 1210 x 540 பிக்சல்ஸ் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த போன் சிறந்த திரை அனுபவத்தை தரும்.

தரமான யுனிசார் 9863ஏ பிராசஸர் (Unisoc 9863A processor) உடன் புதிய லாவா ஸ்மார்ட் 4 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி உடன் லாவா ஸ்மார்ட் 4 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த லாவா ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் 32ஜிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
ஆண்ட்ராய்டு 16 கோ எடிஷன் (Android 16 Go Edition) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த லாவா ஸ்மார்ட் 4 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor)வசதியும் இந்த லாவா ஸ்மார்ட்போனில் உள்ளன.
8எம்பி மெயின் கேமரா + செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது லாவா ஸ்மார்ட் 4 ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் எனறே 5எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் உள்ளன.
சிங்கிள் பாட்டம் பயரிங் ஸ்பீக்கர்கள் (single bottom-firing speaker) லாவா ஸ்மார்ட் 4 மாடலில் உள்ளன. குறிப்பாக இந்த போன்
சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது லாவா நிறுவனம்.
5000எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த லாவா ஸ்மார்ட் 4 மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சாரஜ் செய்ய 10W சார்ஜிங் வசதியும் உள்ளது.

எப்எம் ரேடியோ, டூயல் சிம் 4ஜி சிப்போர்ட், வைஃபைஇ ப்ளூடூத் 4.2 யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த லாவா ஸ்மார்ட்போனில் உள்ளன. அஜந்தா கிரே மற்றும் கோல்டு நிறங்களில் இந்த புதிய லாவா போன் வெளியாகி உள்ளது.
ஆனால் லாவா ஸ்மார்ட் 4 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்களை வெளியிடவில்லை லாவா நிறுவனம். கூடிய விரைவில் இந்த போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள் வெளியாகும் அப்போது அப்டேட் செய்கிறோம்.
Image Credit: Lava


Click it and Unblock the Notifications