வெச்சி செஞ்சிட்டாப்ல.. ரூ.9,999 க்கு 5000mAh பேட்டரி.. 10W சார்ஜிங்.. 90Hz டிஸ்பிளே.. 13MP கேமரா.. எந்த மாடல்?
லாவா நிறுவனத்தின் அடிமட்ட பட்ஜெட் மாடலாக லாவா ஸ்மார்ட் 4 பிளஸ் (Lava Smart 4 Plus) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. பட்ஜெட்டில் 5000mAh பேட்டரி, 10W சார்ஜிங், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், ஏஐ கேமராவை கொடுத்துள்ளது. இந்த லாவா ஸ்மார்ட் 4 பிளஸ் ஸ்மார்ட்போனின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ரூ.10,000 முதல் ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் அடுத்தடுத்த மாடல்களை லாவா மொபைல்ஸ் (Lava Mobiles) நிறுவனம் அறிமுகம் செய்துவருகிறது. முன்னதாக லாவா போல்டு என்2 ஸ்மார்ட்போன் களமிறங்கியது. இப்போது, ரூ.10,000 பட்ஜெட் செக்மெண்ட்டில் லாவா ஸ்மார்ட் 4 பிளஸ் ஸ்மார்ட்போன் களமிறக்கப்பட்டு உள்ளது. இதுவொரு 4ஜி மாடலாக இருக்கிறது.

லாவா ஸ்மார்ட் 4 பிளஸ் அம்சங்கள் (Lava Smart 4 Plus Specifications): ஆக்டா கோர் யுனிசோக் 9863ஏ (Octa Core UNISOC 9863A) சிப்செட்டை இந்த லாவா ஸ்மார்ட் 4 பிளஸ் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. பவர்விஆர் ஜிஇ8322 ஜிபியு (PowerVR GE8322 GPU) கிராபிக்ஸ் கார்டை கொடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 15 கோ எடிஷன் (Android 15 Go Edition) மட்டுமே கிடைக்கிறது.
4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரியுடன் இந்த லாவா ஸ்மார்ட் 4 பிளஸ் ஸ்மார்ட்போன் கிடைக்க இருக்கிறது. மேலும், 4 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கிடைக்கிறது. 512 ஜிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. நானோ + நானோ சிம் கார்டு சிலாட் (SIM Card Slot) கிடைக்கிறது. மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் கூடுதலாக கிடைக்கிறது.
பட்ஜெட் மாடலாக இருப்பதால், 6.75 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை மட்டுமே இந்த லாவா ஸ்மார்ட் 4 பிளஸ் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டு உள்ளது. 13 எம்பி ரியர் ஏஐ கேமரா பேக் செய்துள்ளது. 5 எம்பி செல்பீ ஷூட்டர் கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த கேமராவுக்கு எச்டிஆர் (HDR), போர்ட்ராய்டு (Portrait) மற்றும் நைட் மோட் (Night Mode) ஆகிய பீச்சர்கள் கிடைக்கின்றன. மேலும், இந்த பட்ஜெட் செக்மெண்ட்டில் வழக்கமாக கிடைக்கும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker) கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த விலையிலும் 10W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட மாடலாக இந்த லாவா ஸ்மார்ட் 4 பிளஸ் ஸ்மார்ட்போன் இருக்கிறது. டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரியை கொடுத்துள்ளது. டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டி உள்ளது.
வை-பை 802.11 ஏசி (Wi-Fi 802.11 ac) மற்றும் ப்ளூடூத் 4.2 (Bluetooth 4.2) கனெக்டிவிட்டி உள்ளது. மேலும், ஜிபிஎஸ் (GPS) சப்போர்ட் கிடைக்கிறது. இந்த லாவா ஸ்மார்ட் 4 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 9,999 ஆக இருக்கிறது. லாவா தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ரீடெயில் ஸ்டோர்களிலும் இந்த லாவா ஸ்மார்ட்போன் கிடைக்க இருக்கிறது.
நீலகிரி ப்ளூ (Nilgiri Blue) மற்றும் ஹிமாலயன் சில்வர் (Himalayan Silver) ஆகிய கலர்களில் வாங்கி கொள்ள முடியும். இந்த லாவா ஸ்மார்ட் 4 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு 1 வருட வாரண்டி கிடைக்கிறது. இந்த வாரண்டி மட்டுமல்லாமல், வீட்டில் இருந்தபடி ப்ரீ சர்வீஸ் செய்து கொள்ளலாம். சீன தயாரிப்புகளுக்கு மாற்ற இந்திய பிராண்ட்டான இதை ஆப்ஷனில் எடுக்கலாம்.


Click it and Unblock the Notifications