அப்படிபோடு..ரூ.6,999 பட்ஜெட்ல 50எம்பி கேமரா.. 5000mAh பேட்டரி.. புது Lava போன் அறிமுகம்.. எந்த மாடல்?
இந்தியாவில் லாவா (Lava) நிறுவனம் லாவா ஷார்க் (Lava Shark) எனும் ஸ்மார்ட்போனை மலிவு விலையில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக 5000mAh பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 50எம்பி கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த லாவா ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.
லாவா ஷார்க் அம்சங்கள் ( Lava Shark Specifications): 6.78-இன்ச் எச்டி பிளஸ் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே (HD+ punch-hole display) உடன் இந்த லாவா ஷார்க் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளன. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே மென்மையான ஸ்க்ரோலிங் மற்றும் சிறந்த திரை அனுபவத்தை உறுதி செய்கிறது.

சைடு-பேசிங் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-facing Fingerprint Scanner) உடன் லாவா ஷார்க் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் தூசி மற்றும் நீர்-எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங் (IP54 dust and water-resistant rating)கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லாவா ஸ்மார்ட்போன் மாடல்.
ஆக்டா கோர் யுனிசோக் டி606 (Octa Core Unisoc T606) சிப்செட் உடன் இந்த லாவா ஷார்க் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
4ஜிபி ரேம் + 4ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 64ஜிபி மெமரி உடன் லாவா ஷார்க் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த லாவா ஷார்க் ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் 25ஜிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது. குறிப்பாக ஆண்ட்ராய்டு 14 (Android 14) ஒஎஸ் மூலம் இந்த போன் இயங்குகிறது.
50எம்பி AI ரியர் கேமரா அமைப்புடன் இந்த லாவா ஷார்க் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இந்த போனில் உள்ளது, இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த லாவா ஸ்மார்ட்போனில் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.

5000mAh பேட்டரி உடன் லாவா ஷார்க் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது. டூயல் 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.0, வைஃபை 802.11 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த விவோ போனில் உள்ளன.
குறிப்பாக லாவா ஷார்க் ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,999-ஆக உள்ளது. டைட்டானியம் கோல்ட் ( Titanium Gold) மற்றும் ஸ்டெல்த் பிளாக் (Stealth Black) நிறங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்தியாவில் ஆஃப்லைன் சில்லறை விற்பனை கடைகளில் இந்த ஸ்மார்ட்போன் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








