அசரவைக்கும் பிளிப்கார்ட்.. 5000mAh பேட்டரி.. 13எம்பி கேமரா.. ஆஃபரில் LAVA 5ஜி போன்.. எந்த மாடல்?
லாவா நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதுவும் மற்ற நிறுவனங்களை விட கம்மி விலையில் தரமான அம்சங்களுடன் லாவா நிறுவனம் போன்களை அறிமுகம் செய்வதால் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் லாவா 5ஜி போன் ஒன்று சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது.
தற்போது பிளிப்கார்ட் தளத்தில் லாவா ஷார்க் 5ஜி (Lava Shark 5G) ஸ்மார்ட்போனுக்கு 18 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.12,360 விலையில் வாங்கிவிட முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் கூடுதல் சலுகைகளும் உள்ளன. ஆகவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

லாவா ஷார்க் 5ஜி அம்சங்கள் (Lava Shark 5G Specifications): ஆக்டா கோர் யுனிசோக் டி765 சிப்செட் (Octa Core UNISOC T765) சிப்செட் உடன் லாவா ஷார்க் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.
குறிப்பாக 6.75 இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி (LCD) டிஸ்பிளே வசதியுடன் லாவா ஷார்க் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 720 x 1600பிக்சல்ஸ், 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 16M கலர் டெப்த் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே இந்த போனில் உள்ளதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.
13 எம்பி மெயின் கேமரா + செகண்டரி லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த லாவா ஷார்க் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இதில் உள்ளது.
எல்இடி பிளாஸ், எச்டி வீடியோ ரெக்கார்டிங், போர்ட்ராய்டு, ரீபோகஸ், மோஷன் போட்டோ, எச்டிஆர், நைட் போன்ற பல கேமரா அம்சங்கள் இந்த லாவா ஷார்க் 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன. 4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி வசதி இந்த போனில் உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் இதில் உள்ளது. அதாவது மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) சப்போர்ட் இதில் உள்ளது.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் லாவா ஷார்க் 5ஜி ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், ஆக்சிலரோமீட்டர் சென்சார் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
லாவா ஷார்க் 5ஜி ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி வசதி உள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் தரும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 10W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) ஆதரவும் இதில் உள்ளது. மேலும் IP54 ரேட்டிங் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் ஆதரவும் இந்த அசத்தலான லாவா ஸ்மார்ட்போனில் உள்ளன.


Click it and Unblock the Notifications