பின்றானே இவன்.. அடிமட்ட ரேட்ல வருது புது லாவா 5ஜி.. டிசைனில் மிரளவிடுது.. டூயல் கேமரா.. எந்த மாடல்?
சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு கொஞ்சமும் சளைக்காத டிசைன் மற்றும் பீச்சர்களுடன் அடிமட்ட விலைக்கு ஸ்மார்ட்போன்களை களமிறக்குவதை இந்தியாவின் லாவா (Lava) நிறுவனம் வாடிக்கையாக வைத்து வருகிறது. இப்போது, அடுத்த பட்ஜெட் மாடலுக்கு ரெடியாவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஏற்கனவே, வெளியான லாவா ஷார்க் போனின் 5ஜி வெர்ஷனை களமிறக்க இருக்கிறது. இந்த லாவா ஷார்க் 5ஜி (Lava Shark 5G) போனின் டிசைன் மற்றும் முக்கிய பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன.
லாவா நிறுவனமானது, ரூ.12,000 பட்ஜெட்டில் 3டி கர்வ்ட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், 64 எம்பி கேமரா, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி மற்றும் 6 ஜிபி ரேம் கொண்ட லாவா போல்டு 5ஜி (Lava Bold 5G) போனை சமீபத்தில் களமிறக்கியது. ஏப்ரல் மாதம் வெளியான இந்த போனின் விற்பனை பட்டையை கிளப்பி வருகிறது. இப்போது அடுத்த போனின் வெளியீடு நெருங்கிவிட்டது.

அதைவிட மலிவான பட்ஜெட்டில் இந்த லாவா ஷார்க் 5ஜி போன் வெளியாக வாய்ப்புள்ளதாக மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த போனின் கேமரா, ரேம், சிப்செட் மற்றும் ஓஎஸ் விவரங்களுடன் டிசைன் விவரங்களும் மார்கெட்டில் கசிந்துள்ளன. ரூ.10,000 பட்ஜெட்டை விட மலிவான விலைக்கு இந்த போன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லாவா ஷார்க் 5ஜி அம்சங்கள் (Lava Shark 5G Specifications): டிசைனை பார்க்கையில், டூயல் ரியர் கேமரா சிஸ்டம் மற்றும் 2 கலர்கள் இருக்கின்றன. அதோடு, கோல்டு (Gold) மற்றும் ப்ளூ (Blue) கலர்களில் வெளியாக இருக்கிறது. மலிவு விலை 5ஜி சிப்செட்டான ஆக்டா கோர் யுனிசோக் டி765 எஸ்ஓசி (Octa Core Unisoc T765 SoC) மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கிடைக்க இருக்கிறது.
இதுபோக 13 எம்பி மெயின் கேமரா வர இருக்கிறது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கிடைக்க இருக்கிறது. மேற்கண்ட பீச்சர்கள் மட்டுமே மார்கெட்டில் கசிந்துள்ளன. ஓரிரு வாரங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. இந்த பீச்சர்களை வைத்து பார்க்கும்போது, அடிமட்ட விலைக்கு வருவது கிட்டத்தட்ட உறுதிதான். முந்தைய மாடல் எப்படி?
லாவா ஷார்க் 4ஜி மாடலானது, மார்ச் 25ஆம் தேதி இந்திய மார்கெட்டில் வெளியாகியது. ஐபோன் லுக் கொடுக்கும்படியான டிசைனில் டிரிபிள் ரியர் கேமரா கொடுத்தது. இந்த போனிலும் 4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொண்ட ஒரேவொரு வேரியண்ட் வெளியாகியது. 6.67 இன்ச் (720 x 1612 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைத்தது.
இந்த பஞ்ச்-ஹோல் டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 269 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட யுனிசோக் டி606 ஆக்டா கோர் (UNISOC T606 Octa Core) சிப்செட் கிடைக்கிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 10W சார்ஜர் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. 50 எம்பி கேமரா கொண்ட டிரிபிள் ரியர் செட்டப் உள்ளது.
8 எம்பி செல்பீ ஷூட்டர் மற்றும் ஸ்கிரீன் பிளாஷ் சப்போர்ட் கிடைக்கிறது. இதிலும் டைட்டானியம் கோல்டு கலர் இருக்கிறது. அதேபோல பிளாக் கலரும் இருக்கிறது. இந்த லாவா ஷார்க் 4ஜி போனின் விலை ரூ.6,999ஆக இருக்கிறது. ஆகவே, அடுத்து வெளியாக இருக்கும் லாவா ஷார்க் 5ஜி போனின் விலை ரூ.10,000 பட்ஜெட்டுக்குள் இருக்கும் என்பது உறுதிதான்.
Image Credits: YTECHB.com


Click it and Unblock the Notifications








