Home
Mobile

ஆஃபரில் LAVA 5ஜி போன்.. எல்சிடி டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. டூயல் ரியர் கேமரா.. எந்த மாடல்?

லாவா ஷார்க் 2 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட லாவா ஷார்க் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இப்போது லாவா ஷார்க் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் லாவா ஷார்க் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 13 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் கூடுதல் சலுகைகளும் உள்ளன. ஆகவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

ஆஃபரில் LAVA 5ஜி போன்.. எல்சிடி  டிஸ்பிளே.. எந்த மாடல்?

லாவா ஷார்க் 5ஜி அம்சங்கள் (Lava Shark 5G Specifications): ஆக்டா கோர் யுனிசோக் டி765 சிப்செட் (Octa Core UNISOC T765) சிப்செட் உடன் லாவா ஷார்க் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

அதுவும் 6.75 இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி (LCD) டிஸ்பிளே வசதியுடன் லாவா ஷார்க் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 720 x 1600பிக்சல்ஸ், 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 16M கலர் டெப்த் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே இந்த போனில் உள்ளதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.

13 எம்பி மெயின் கேமரா + செகண்டரி லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த லாவா ஷார்க் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இதில் உள்ளது.

அதேபோல் எல்இடி பிளாஸ், எச்டி வீடியோ ரெக்கார்டிங், போர்ட்ராய்டு, ரீபோகஸ், மோஷன் போட்டோ, எச்டிஆர், நைட் போன்ற பல கேமரா அம்சங்கள் இந்த லாவா ஷார்க் 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன. 4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி வசதி இந்த போனில் உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் இதில் உள்ளது. அதாவது மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) சப்போர்ட் இதில் உள்ளது.

ஆஃபரில் LAVA 5ஜி போன்.. எல்சிடி  டிஸ்பிளே.. எந்த மாடல்?

குறிப்பாக லாவா ஷார்க் 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், ஆக்சிலரோமீட்டர் சென்சார் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த போனில் உள்ளன. இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

லாவா ஷார்க் 5ஜி ஸ்மார்ட்போனில் 5000mAh பேட்டரி வசதி உள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் தரும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 10W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) ஆதரவும் இதில் உள்ளது. மேலும் IP54 ரேட்டிங் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் ஆதரவும் இந்த அசத்தலான லாவா ஸ்மார்ட்போனில் உள்ளன.

Best Mobiles in India

English summary
Lava Shark 5G phone with 4GB RAM available at 13 percent discount on Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X