Home
Mobile

மே 23 வரை எந்த போனும் வாங்காதீங்க.. மலிவு விலை.. வருகிறது புதிய Lava 5ஜி போன்.. எந்த மாடல்?

லாவா நிறுவனம் அடுத்து லாவா ஷார்க் 5ஜி (Lava Shark 5G)) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய லாவா போன் வரும் மே 23-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும் அறிமுகத்திற்கு முன்பு இந்த போனின் விலை மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம்.

லாவா ஷார்க் 5ஜி அம்சங்கள் (Lava Shark 5G specifications): 6.7-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் இந்த லாவா ஷார்க் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.

மே 23 வரை எந்த போனும் வாங்காதீங்க.. வருகிறது புதிய Lava 5ஜி போன்..

சக்திவாய்ந்த யுனிசோக் டி765 ஆக்டா கோர் (UNISOC T765 Octa Core) சிப்செட் உடன் லாவா ஷார்க் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். குறிப்பாக இந்த போனில் அனைத்து ஆப்களையும் இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

13எம்பி ரியர் கேமரா உடன் லாவா ஷார்க் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி வசதியுடன் லாவா ஷார்க் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தூசி மற்றும் ஸ்பிளாஷ் எதிர்ப்பிற்கான ஐபி54 ரேட்டிங்கையும் (Dust and Splash Resistance IP54 Rating) பெற்றுள்ளது லாவா ஷார்க் 5ஜி ஸ்மார்ட்போன். பின்பு ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் இந்த போன் இயங்கும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

கோல்டு (Gold) மற்றும் ப்ளூ (Blue)நிறங்களில் இந்த புதிய லாவா ஷார்க் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க கிடைக்கும். மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த போனில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பலவேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய ரூ.லாவா ஷார்க் 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.10,000-க்கு கீழ் இந்த லாவா ஷார்க் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த புதிய லாவா போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Shark 5G India launch date revealed: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X