Home
Mobile

SALE புரட்டி எடுக்குது.. ரூ.7,249-க்கு இறங்கிய 5G போன்.. 5000mAh பேட்டரி.. 18W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் லாவா ஷார்க் 5ஜி (Lava Shark 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. 5000mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 13 எம்பி கேமரா மட்டுமல்லாமல், IP54 ரேட்டிங் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் பிரீமியம் லுக் கொடுக்கிறது. ஆக்டோ கோர் யுனிசோக் டி765 சிப்செட் கொண்ட இந்த லாவா ஷார்க் 5ஜி ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் தள்ளுபடி விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

4 ஜிபி ரேம் (4 ஜிபி விர்ச்சுவல்) + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.7,999ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.750 உடனடி டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.7,249 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு இந்த டிஸ்கவுண்ட் வருகிறது. அதேபோல ஈஎம்ஐ சலுகையும் கிடைக்கிறது.

SALE புரட்டி எடுக்குது.. ரூ.7,249-க்கு இறங்கிய 5G போன்.. 5000mAh!

ஆகவே, இதில் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு மூலம் ஈஎம்ஐ ஆப்ஷனில் ஆர்டர் செய்தால், ரூ.7,99 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. மேலும், ரூ.7,550 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் கொடுக்கிறது. பிரீமியம் லுக் கொடுக்கும்படி டயமன்ட் ஸ்பார்கிள் டிசைனில் பாடி கிடைக்கிறது. மேலும், ஸ்டெல்லர் கோல்டு (Stellar Gold), ஸ்டெல்லர் ப்ளூ (Stellar Blue) கலர்களில் கிடைக்கிறது.

லாவா ஷார்க் 5ஜி அம்சங்கள் (Lava Shark 5G Specifications): இந்த பட்ஜெட்டில் கிடைத்தாலும், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொடுக்கிறது. ஆனால், சிப்செட்டை பார்க்கையில், ஆக்டா கோர் யுனிசோக் டி765 எஸ்ஓசி (Octa Core UNISOC T765 SoC) கிடைக்கிறது. இந்த சிப்செட்டுக்கு வழக்கமாக கிடைக்கும் மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.

ஸ்கிரீன் ஃபிளாஷ் சப்போர்ட் கொண்ட 5 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. இந்த லாவா ஷார்க் 5ஜி ஸ்மார்ட்போனில் 13 எம்பி மெயின் கேமரா + செகண்டரி கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்கிறது. எச்டி (HD) ரெசொலூஷனில் வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் கேமரா பீச்சர்கள் கிடைக்கின்றன.

ஆகவே, போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), எச்டிஆர் மோட் (HDR Mode), நைட் மோட் (Night Mode) மற்றும் ரீபோகஸ் மோட் (Refocus Mode) கிடைக்கிறது. இந்த லாவா ஷார்க் 5ஜி ஸ்மார்ட்போனில் 6.75 இன்ச் (720 x 1600) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இந்த 2.5D கிளாஸ் டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.

மேலும், 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 16எம்எம் கலர் டெப்த் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த லாவா ஸ்மார்ட்போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனின் அடுத்த வெர்ஷனான லாவா ஷார்க் 2 (Lava Shark 2) ஸ்மார்ட்போன் ஓரிரு வாரங்களில் வெளியாக இருக்கிறது. இது கிட்டத்தட்ட ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனை போல டிசைன் கொடுக்கிறது. அதேபோல 50 எம்பி ஏஐ கேமரா கிடைக்க இருக்கறது. இந்த டிசைன் மற்றும் கேமரா விவரங்களை மட்டுமே லாவா நிறுவனம் உறுதி செய்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Shark 5G Available at a Discounted Price in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X