அடுத்த லாவா போன் ரெடி.. 50எம்பி கேமரா.. ஆண்ட்ராய்டு 15 OS.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
லாவா நிறுவனம் அடுத்து லாவா ஷார்க் 2 (Lava Shark 2) ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது தற்போது இந்த போனின் டீசர் வெளியாகி உள்ளது. எனவே வரும் வாரங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் ஆன்லைனில் லாவா ஷார்க் 2 போனின் சில விவரங்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
லாவா ஷார்க் 2 அம்சங்கள் (Lava Shark 2 Specifications): ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் போன்ற கேமரா வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த புதிய லாவா ஷார்க் 2 ஸ்மார்ட்போன். அதுவும் 50எம்பி ஏஐ ட்ரிபிள் ரியர் கேமரா வசதியுடன் இந்த லாவா ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி அல்லது 16எம்பி கேமராவுடன் இந்த புதிய லாவா ஷார்க் 2 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பலவேறு கேமரா அம்சங்கள் புதிய லாவா ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) கொண்ட எச்டி டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய லாவா ஷார்க் 2 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 720 × 1600 பிக்சல்ஸ், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இருக்கும்.
ஆக்டோ கோர் யுனிசாக் சிப்செட் உடன் இந்த புதிய லாவா ஷார்க் 2 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் லாவா ஷார்க் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) கொண்டுள்ளது இந்த அசத்தலான லாவா ஷார்க் 2 மாடல்.
ஸ்பீக்கர் கிரில், 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக்,யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்ற வசதிகளும் இந்த புதிய லாவா ஷார்க் 2 ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். அதுவும் IP54 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் புதிய லாவா போன் வெளிவரும்.
5000mAh பேட்டரி வசதியுடன் லாவா ஷார்க் 2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக பிளாக் மற்றும் சில்வர் நிறங்களில் இந்த புதிய லாவா போன் அறிமுகமாகும்.
குறிப்பாக இந்த போனில் மேம்பட்ட ஏஐ அம்சங்களும் உள்ளன. வைஃபை, ஜிபிஎஸ், ஜிபிஎஸ், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய லாவா ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போன் சற்று கம்மி பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








