வெச்சி செஞ்சிட்டாப்ல.. ரூ.16000 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 18W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?
இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் அடுத்தடுத்து பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை களமிறக்கி வரும் லாவா மொபைல்ஸ் நிறுவனமானது, இப்போது ஷார்க் சீரிஸ் கீழ் புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது. பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், கேமரா பீச்சர்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப இருக்கிறது. சிப்செட் மட்டும் பெரிதாக எதிர்பார்க்கும்படி இல்லை.
லாவா ஷார்க் 2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பிரீமியம் லுக் கொடுக்கும் பட்ஜெட் மாடலாக இருக்கிறது. ஆகவே, இந்த ஸ்மார்ட்போனை பார்த்தால், ரூ.25,000 பட்ஜெட் மாடல் போன்ற பீல் கொடுக்கும். இதேபோல பீச்சர்களும் இருக்கிறாதா என்பதை ஸ்மார்ட்போன் பிரியர்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

லாவா ஷார்க் 2 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Lava Shark 2 Pro 5G Specifications): 6.74 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த டிஸ்பிளேவுக்கு எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 550 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது.
யுனிசோக் டி8200 6என்எம் (Unisoc T8200 6nm) சிப்செட் கொண்ட மாடலாக இந்த லாவா ஷார்க் 2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் வெளியாகி இருக்கிறது. 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சாப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது.
ஆகவே, மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் மற்றும் டுயல் சிம் சிலாட் (ஹைபிரிட்) கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 8 எம்பி செல்பீ கேமராவை இந்த லாவா ஷார்க் 2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து இருக்கிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. 8.68 எம்எம் தடிமன் கொண்டுள்ளது.
மேலும், 207 கிராம் எடை கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கொடுக்கிறது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் (Dust & Splash Resistant) கொடுக்கப்பட்டு உள்ளது. 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ (5G SA / NSA) மற்றும் 4ஜி வோஎல்டிஇ (4G VoLTE) கிடைக்கிறகது.
வை-பை 802 11. ஏசி (Wi-Fi 802.11 ac), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) மற்றும் ஜிபிஎஸ் (GPS) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. மேலும், குளோனாஸ் (GLONASS), யூஎஸ்பி டைப்-சி (USB Type-C) சார்ஜிங் போர்ட் கிடைக்கிறது. ஆகாஷ் ப்ளூ (Akash Blue) மற்றும் நந்தா சில்வர் (Nanda Silver) ஆகிய கலர்களில் இந்த லாவா ஷார்க் 2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.
6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.16,699 ஆக இருக்கிறது. இப்போது, ரீடெயில் அவுட்லெட்கள் மற்றும் பார்ட்னர் சர்வீஸ் புரொவைடர்களில் மட்டுமே கிடைக்கிறது. ஈ-காமர்ஸ் தளங்களில் ஓரிரு நாட்களில் எதிர்பார்க்கலாம். இந்த பட்ஜெட்டில் பிரீமியம் லுக் வேண்டுமானால், லாவா ஷார்க் 2 ப்ரோ 5ஜி மாடலை தேர்ந்தெடுக்கலாம்.


Click it and Unblock the Notifications
