ஒத்த போனுக்கு மொத்தமும் காலி.. ரூ.11,999 க்கு 6000mAh பேட்டரி LAVA 5G போன்.. 18W பாஸ்ட் சார்ஜிங்.. 13MP கேமரா!
லாவா நிறுவனத்தின் அடுத்த பட்ஜெட் விலை மாடலாக லாவா ஷார்க் 2 5ஜி (LAVA SHARK 2 5G) ஸ்மார்ட்போன் களமிறங்கி இருக்கிறது. 6000mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், 13 எம்பி கேமரா போன்ற பட்ஜெட்டில் கிடைக்காத பீச்சர்களையும் பேக் செய்துள்ளது. இந்த லாவா ஷார்க் 2 5ஜி ஸ்மார்ட்போனின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு போட்டியாக இந்தியாவின் லாவா மொபைல்ஸ் (LAVA Mobiles) நிறுவனம், மலிவான விலைக்கு ஸ்மார்ட்போன்களை களமிறக்கி வருகிறது. இதில் ஷார்க் சீரிஸ் மாடல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதில் பிரீமியம் லுக் கொடுக்கும்படியான மலிவு விலை 5ஜி மாடலாக லாவா ஷார்க் 2 5ஜி சேர்ந்துள்ளது.

லாவா ஷார்க் 2 5ஜி அம்சங்கள் (LAVA SHARK 2 5G Specifications): 6.7 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. இந்த டிஸ்பிளேவுக்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 2.5டி கிளாஸ் கிடைக்கிறது. மேலும், 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 16.7 மில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட மாடலாக இருக்கிறது.
13 எம்பி மெயின் கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ கேமராவை கொடுத்துள்ளது. போர்ட்ராய்டு மோட், ரீபோகஸ் மோட், மோஷன் போட்டோர, எச்டிஆர் மோட், நைட் மோட், ஏஐ மோட் உள்ளிட்ட கேமரா பீச்சர்களையும் இந்த லாவா ஷார்க் 2 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொடுத்துள்ளது. 256 ஜிபிக்கான மைக்ரோஎஸ்டி சப்போர்ட் கிடைக்கிறது.
18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரியை கொடுத்துள்ளது. 185 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் செய்து கொள்ளலாம். 750 மணி நேரங்களுக்கு ஸ்டாண்ட்பை பேக்கப் கொடுக்கும். 810 நிமிடங்களுக்கு யூடியூப் பிளேடைம் கிடைக்கும். இந்த பேட்டரியுடன் 8.75 எம்எம் தடிமன் மற்றும் 210 கிராம் எடை கொடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது.
இந்த பட்ஜெட் மாடல்களில் வழக்கமாக கிடைக்கும் ஆக்டா கோர் யுனிசோக் டி8200 6என்எம் (Unisoc T8200 6nm) சிப்செட்டை கொடுத்துள்ளது. மாலி ஜி57 எம்சி2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டை இந்த லாவா ஷார்க் 2 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு உள்ளது.
IP64 ரேட்டிங்குடன் டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) கொடுக்கப்பட்டு உள்ளது. 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ (5G SA / NSA), 4ஜி வோஎல்டிஇ (4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகிய கனெக்டிவிட்டிகள் கிடைக்கின்றன. இப்போது, விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
லாவா ஷார்க் 2 5ஜி விலை (LAVA SHARK 2 5G Price): 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.11,999ஆக இருக்கிறது. வருகிற ஜூன் 10ஆம் தேதி லாவா தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. பிளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களில் விரைவில் எதிர்பார்க்கலாம். இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ற பேட்டரி மற்றும் டிசைனை பார்க்க முடிகிறது.


Click it and Unblock the Notifications