Home
Mobile

ஆர்டர் பிச்சிக்கும்.. ரூ.15,000 பட்ஜெட்ல புது LAVA 5G போன்.. 120Hz டிஸ்பிளே.. IP64 ரேட்டிங்.. எந்த மாடல்?

லாவா மொபைல்ஸ் (Lava Mobiles) நிறுவனத்தின் அடுத்த பட்ஜெட் விலை மாடலாக லாவா ஷார்க் 2 5ஜி (Lava Shark 2 5G) ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு மற்றும் முக்கிய பீச்சர்கள் தெரிய வந்துள்ளன. இந்த லாவா ஷார்க் 2 5ஜி ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

2025ஆம் ஆண்டு மே 23ஆம் தேதியில் லாவா ஷார்க் 5ஜி (Lava Shark 5G) ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகியது. ஆகவே, இந்த மே மாதத்தில் அடுத்த ஷார்க் சீரிஸ் ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு ஏற்ப லாவா ஷார்க் 2 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாக இருப்பதை, லாவா மொபைல்ஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

ஆர்டர் பிச்சிக்கும்.. ரூ.15,000 பட்ஜெட்ல புது LAVA 5G போன்.. மாடல்?

டிசைன் மற்றும் கலர் விவரங்களை வெளியிடவில்லை. இருப்பினும், டிஸ்பிளே, பேட்டரி, டியூரபிலிட்டி பீச்சர்கள் வெளியாகி இருக்கின்றன. 5ஜி மாடலாக இருப்பதால், அதற்கு ஏற்ப சிப்செட்டை எதிர்பார்க்கலாம். பட்ஜெட் மாடலாக இருப்பதால், யுனிசோக் சிப்செட் எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், 5,00,000 மேல் அன்டுடு ஸ்கோர் கொண்ட சிப்செட் வர இருக்கிறது.

லாவா ஷார்க் 2 5ஜி அம்சங்கள் (Lava Shark 2 5G Specifications): 6.75 இன்ச் டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. இதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்க உள்ளது. நாள் முழுக்க பேக்கப் கொடுக்கும்படியான பேட்டரி கிடைக்க இருக்கிறது. ஆகவே, 5000mAh பேட்டரி அல்லது அதற்கு மேல் கேபாசிட்டி கொண்ட பேட்டரி கிடைக்க வாய்ப்புள்ளது.

IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொண்ட மாடலாக இந்த லாவா ஷார்க் 2 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது. இந்த பீச்சர்களுடன் ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் வெளியாக இருக்கிறது. ஆகவே, இந்த விலைக்கு ஏற்ப பீச்சர்களை எதிர்பார்க்கலாம். இப்போது, முன்னதாக வெளியான லாவா ஷார்க் ஸ்மார்ட்போனின் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

லாவா ஷார்க் 5ஜி அம்சங்கள் (Lava Shark 5G Specifications): ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி765 6என்எம் (Octa Core UNISOC T765 6nm) சிப்செட் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, லாவா ஷார்க் 2 5ஜி ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) எதிர்பார்க்கலாம். 6.75 இன்ச் (1612 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது.

இதில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 13 எம்பி ரியர் கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ கேமராவை இந்த லாவா ஷார்க் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கிடைக்கிறது. மேலும், IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது.

18W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. இந்திய மார்கெட்டில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.7,999ஆக இருந்தது. ரூ.10,000 பட்ஜெட்டைவிட மலிவாக களமிறங்கி இருககிறது. லாவா ஷார்க் 2 5ஜி ஸ்மார்ட்போனின் அப்கிரேடட் சிப்செட், டிஸ்பிளே பீச்சர்களை எதிர்பார்க்கலாம். மே மாத இறுதியில் வெளியாக வாய்ப்புள்ளது.

Best Mobiles in India

English summary
Lava Shark 2 5G With 120Hz Display to launch this May in India Under Rs 15000 Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X