'சபாஷ்' போட வைக்கும் லாவா எஸ்-12 ஸ்மார்ட்போன்!

|

'சபாஷ்' போட வைக்கும் லாவா எஸ்-12 ஸ்மார்ட்போன்!

சிறந்த ஸ்மார்ட்போன்களை வெளியிடுவதில் லாவா நிறுவனம் தனது தனித்திறமையை நிலைநாட்டி இருக்கிறது லாவா எஸ்-12 ஸ்மார்ட்போன். இது கூகுள் ஆன்ட்ராய்டு 2.2 ஃபிரையோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும்.

இதன் 3.2 இஞ்ச் எச்எஸ்விஜிஏ தொடுதிரை வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள சூப்பர் எல்சிடி திரையின் மூலம் 480 X 320 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுப்பதோடு, 262கே கலர்களுக்கு சப்போர்டும் செய்கிறது. 600 மெகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் கியூவல்காம் 7227 பிராசஸரையும் இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது.

லாவா எஸ்-12 ஸ்மார்ட்போனில் 5 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டுள்ளதால் இதில் 2X சூம் வசதியையும் எளிதாக பெறலாம். ஆடியோ மற்றும் வீடியோ பிளேயர் வசதியினை கொண்ட இந்த லாவா எஸ்-12 ஸ்மார்ட்போன் ஜிபிஆர்எஸ், 3ஜி போன்ற சிறந்த தொழில் நுட்பங்களை வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கு இணங்க வாரி வழங்குகிறது.

லித்தியம் அயான் 1,300 எம்ஏஎச் பேட்டரி இந்த ஸ்மார்ட்போனில் உள்ளதால் 485 நிமிடங்கள் டாக் டைம் மற்றும் 590 எம்ஏஎச் ஸ்டான்-பை டைம் வசதியையும் பெறலாம். மதி நுட்பம் நிறைந்த தொழில் நுட்ப வள்ளுனர்களின் மூலம் புதிய வசதிகளுடன் வந்திருக்கும் லாவா எஸ்-12 ஸ்மார்ட்போன் ரூ.8,200 ஒட்டிய விலையில் கிடைக்கும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X