Home
Mobile

ஜன.26 கடைசி: அடிமட்ட விலையில் மாடல்கள்.. 3D டிஸ்பிளே.. 66W சார்ஜிங்.. இன்னும் பல இருக்கு.. எந்தெந்த மாடல்கள்?

லாவா குடியரசு தின விற்பனையில் (Lava Republic Day Sale) பட்ஜெட் மாடல்கள் முதல் மிட்-ரேஞ்ச் மாடல்களை வரையில் அடிமட்ட விலைக்கு கிடைக்கின்றன. டூயல் டிஸ்பிளேவில் தொடங்கி சோனி சென்சார் கேமரா வரையில் கொண்ட லாவா மாடல்களுக்கு இப்போது டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஜனவரி 24ஆம் தேதி தொடங்கும் இந்த குடியரசு தின விற்பனையானது, ஜனவரி 26ஆம் தேதியில் முடிகிறது. ஆகவே, உங்களது பட்ஜெட்டில் கிடைக்கும் மாடல்களை விட்டுவிடாதீர்கள்.

3டி கர்வ்ட் மெயின் டிஸ்பிளே, 1.74 இன்ச் செகண்டரி டிஸ்பிளே, 50 எம்பி சோனி கேமரா, 66W சார்ஜிங் மற்றும் 8 ஜிபி ரேம் கொண்ட லாவா அக்னி 3 5ஜி (Lava Agni 3 5G) போனின் விலை ரூ.22,999ஆக இருக்கிறது. இதற்கு ரூ.3000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. 13 எம்பி கேமரா, 5000mAh பேட்டரியுடன் ரூ.6,199 விலை கொண்ட லாவா ஓ3 போனுக்கு ரூ.1000 வரையில் பேங்க் ஆஃபர் கிடைக்கிறது.

ஜன.26 கடைசி: அடிமட்ட விலையில் மாடல்கள்.. 3D டிஸ்பிளே.. 66W சார்ஜிங்!

50 எம்பி கேமரா, 5000mAh பேட்டரி, 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொண்ட லாவா யுவா 5ஜி (Lava Yuva 5G) போனின் விலை ரூ. 8,699ஆக இருக்கிறது. இப்போது, ரூ.870 ஆஃபர் மற்றும் ரூ.1000 வரையில் பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. 50 எம்பி டிரிபிள் கேமரா, 6 ஜிபி ரேம், மீடியாடெக் டைமன்சிட்டி சிப்செட் கொண்ட லாவா பிளேஸ் 5ஜி (Lava Blaze 5G) போனுக்கு ரூ.930 ஆஃபர் கிடைக்கிறது.

இதுபோக ரூ.1000 வரையில் பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. டைமன்சிட்டி 6300 சிப்செட், 50 எம்பி மெயின் கேமரா, 5000mAh பேட்டரி, 6 ஜிபி ரேம் கொண்ட லாவா பிளேஸ் 3 5ஜி (Lava Blaze 3 5G) போனின் விலை ரூ.11,499ஆக இருக்கிறது. இப்போது, ரூ.1000 ஆஃபர் கொடுக்கப்படுகிறது. மேலும், ரூ.1000 வரையில் பேங்க் டிஸ்கவுண்ட் போக ஆர்டர் செய்ய கிடைக்கிறது.

3டி கர்வ்ட் டிஸ்பிளே, டைமன்சிட்டி 7050 சிப்செட், 64 எம்பி சோனி கேமரா, 8 ஜிபி ரேம் மற்றும் 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களை கொடுக்கும் லாவா பிளேஸ் கர்வ் 5ஜி (Lava Blaze Curve 5G) போனின் விலை ரூ.14,999ஆக தொடங்குகிறது. இந்த விலையில் ரூ.1000 ஆஃபர் கொடுக்கப்படுகிறது. அதேபோல ரூ.1000 வரையில் பேங்க் டிஸ்கவுண்ட் பெற்று கொள்ள முடிகிறது.

கர்வ்ட் டிஸ்பிளே, 64 எம்பி கேமரா, டைமன்சிட்டி 7025 சிப்செட், செகண்டரி ஸ்கிரீன் போன்ற பீச்சர்களுடன் லாவா பிளேஸ் டூயோ 5ஜி (Lava Blaze Duo 5G) ரூ.16,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த விலையில் ரூ.2000 ஆஃபர் இப்போது கிடைக்கிறது. இதுபோக ரூ.2000 பேங்க் டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம். இதேபோல லாவா பிளேஸ் எக்ஸ் (Lava Blaze X) போனுக்கும் சலுகை இருக்கிறது.

கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா போன்ற பீச்சர்களை கொடுக்கும் இந்த போனுக்கு ரூ.2000 ஆஃபர் மற்றும் ரூ.2000 வரையில் பேங்க் டிஸ்கவுண்ட் அல்லது ஈஎம்ஐ சலுகை கிடைக்கிறது. 50 எம்பி கேமரா, 5000mAh பேட்டரி கொண்ட லாவா ஓ3 ப்ரோ (Lava O3 Pro) போனுக்கு ரூ.350 ஆஃபர் மற்றும் ரூ.1000 வரையில் டிஸ்கவுண்ட் வருகிறது.

10W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி கேமரா, 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களுடன் லாவா யுவா 4 (Lava Yuva 4) போன் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த போனின் விலை ரூ.7,099ஆக தொடங்குகிறது. இப்போது, குடியரசு தின விற்பனையில் ரூ.355 ஆஃபர் மற்றும் ரூ.1000 வரையில் பேங்க் டிஸ்கவுண்ட் உள்ளது. பேங்க் டிஸ்கவுண்ட் எச்டிஎப்சி கார்டுகளுக்கு வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Republic Day Sale 2025 Available Till January 26 Check Limited Time Discounts on Smartphones
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X