Home
Mobile

Lava Pulse 1: வெறும் ரூ.1,999- உடல் வெப்பம் அறியலாம், 6 நாட்கள் பேட்டரி ஆயுள் இன்னும் நிறைய!

லாவா தனது சமீபத்திய போனாக லாவா பல்ஸ் 1 மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் தனித்துவ அம்சமாக உள்ளமைக்கப்பட்ட தொடர்பில்லா வெப்பமானி அதாவது contactless thermometer பொருத்தப்பட்டுள்ளது.

லாவா பல்ஸ் 1 மொபைல்

லாவா பல்ஸ் 1 மொபைல்

லாவா பல்ஸ் 1 மாடலை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த போனின் விலை ரூ.1,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போனின் தனித்துவ அம்சமாக உள்ளமைக்கப்பட்ட தொடர்பில்லா வெப்பமானி அதாவது contactless thermometer பொருத்தப்பட்டுள்ளது. இந்த போன் ரோஸ் கோல்ட் வண்ணத்தில் கிடைக்கிறது.

2.4 அங்குல டிஸ்ப்ளே

2.4 அங்குல டிஸ்ப்ளே

லாவா பல்ஸ் 1 மாடல் போன் அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஆயிரக்கணக்கான சில்லறை விற்பனை கடைகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2.4 அங்குல டிஸ்ப்ளே இதில் இருக்கிறது. இந்த சாதனம் 32 ஜிபி வரை சேமிப்பு விரிவாக்க வசதி கொண்டுள்ளது.

தொடர்பில்லா வெப்பமானி

தொடர்பில்லா வெப்பமானி

லாவா பல்ஸ் 1 போனில் இருக்கும் தொடர்பில்லா வெப்பமானியின் பயன்பாடு குறித்து பார்க்கையில், இந்த போனில் சென்சாரைத் தொடாமலேயே பயனர்கள் தங்களின் உடல் வெப்ப நிலையை அறிந்துக் கொள்ளலாம். பயனர்கள் தங்கள் கையின் பின்புறம் அல்லது நெற்றிப் பகுதியில் இருந்து சில சென்டிமீட்டர் தொலைவில் வைத்து உடல் வெப்பநிலையை அறியலாம்.

பாலிகார்பனேட் கட்டமைப்பு

பாலிகார்பனேட் கட்டமைப்பு

லாவா பல்ஸ் 1 பாலிகார்பனேட் கட்டமைப்பை கொண்டுள்ளது. இந்த போனுக்கு மிலிட்டரி கிரேடு சான்றளிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த போன் தவறி கீழே விழுந்தாலும் எளிதாக உடையக்கூடியது அல்ல. இந்த போனுக்கு 1 ஆண்டு மாற்று சேவை வழங்கப்படுகிறது.

1800 எம்ஏஎச் பேட்டரி

1800 எம்ஏஎச் பேட்டரி

லாவா பல்ஸ் 1 போனில் சூப்பர் பேட்டரி பயன்முறை ஆதரிக்கப்படுகிறது. இதில் 1800 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த போனை ஒரு முறை முழு சார்ஜ் செய்தால் 6 நாட்களுக்கு பேட்டரி ஆயுள் நீடிக்கும்.

டூயல் சிம் ஆதரவு

டூயல் சிம் ஆதரவு

லாவா பல்ஸ் 1 போனில் தொடர்புகளை சேமிக்க புகைப்பட ஐகான்கள், ரெக்கார்டிங் அம்சத்தோடு வயர்லெஸ் எஃப்எம், டூயல் சிம் ஆதரவு போன்ற பல்வேறு அம்சங்கள் கொண்டுள்ளது. இந்த போனில் ஆட்டோ கால் ரெக்கார்டிங் தொழில்நுட்பம், ஆங்கிலம், இந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு, குஜராத்தி மற்றும் பஞ்சாபி உள்ளிட்ட 7 மொழிகளில் டைப் செய்ய அனுமதிக்கிறது.

Best Mobiles in India

English summary
Lava Pulse 1 Phone Launched with Contactless Thermometer at Rs.1999
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X