தெர்மோமீட்டர் உடன் அறிமுகமான முதல் Lava Pulse 1 போன்.. விலையோ மிகவும் குறைவு..

|

லாவா நிறுவனம் இன்று தனது சமீபத்திய பியூச்சர் போன் மாடலான லாவா பல்ஸ் 1 மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த போன் உள்ளமைக்கப்பட்ட தெர்மோமீட்டர் உடன் வருகிறது. இந்த பியூச்சர் போன் இந்தியச் சந்தையில் வெறும் ரூ. 1999 என்ற விலையில் ரோஸ் கோல்ட் வண்ணத்தில் கிடைக்கிறது.

லாவா பல்ஸ் 1 போன்

லாவா பல்ஸ் 1 போன்

இந்த பியூச்சர் போன் ஆன்லைனில் அமேசான், பிளிப்கார்ட் வழியாகவும், நாட்டின் 100K+ சில்லறை கடைகளின் வழியாகவும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. லாவா பல்ஸ் 1 போனில் உள்ள சென்சாரைத் தொடாமல் பயனர்கள் தங்கள் உடல் வெப்பநிலையை அளவிட முடியும். பயனர்கள் தங்கள் கையின் பின்புறம் அல்லது நெற்றியிலிருந்து சில சென்டிமீட்டர் இடைவெளியில் போனை வைக்க வேண்டும்.

தெர்மோமீட்டர் உடன் பியூச்சர் போன்

தெர்மோமீட்டர் உடன் பியூச்சர் போன்

போனில் உள்ள சென்சார் பயனர் உடலில் உள்ள வெப்பநிலையை கண்காணித்து அதை உடனே திரையில் காண்பிக்கிறது. லாவா பல்ஸ் 1 போன் உறுதியான பாலிகார்பனேட் பாடியுடன் 2.4' இன்ச் டிஸ்பிளேவுடன் வருகிறது. சாதனம் 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய எஸ்.டி கார்டு அம்சத்தையும் கொண்டுள்ளது. இந்த போன் 6 நாட்கள் வரை நீடிக்கும் 1800 mAh பேட்டரியுடன் வருகிறது.

Google எச்சரிக்கை.. குழந்தைகளை குறிவைக்கும் இந்த 3 ஆப்ஸை உடனே டெலீட் செய்யுங்கள்..

1 ஆண்டு ரீபிளேஸ்மென்ட் உறுதி

1 ஆண்டு ரீபிளேஸ்மென்ட் உறுதி

லாவா பல்ஸ் 1 பியூச்சர் போன் மிலிட்டரி கிரேடு சான்றளிக்கப்பட்டதாகும், அதாவது பயனர்கள் இந்த போன் பற்றி எந்த கவலையும் இல்லாமல் பயன்படுத்தலாம். குறிப்பாக இந்த போனை பயனர்கள் கையிலிருந்து தவறி கீழேவிட்டாலும் கூட கவலைப் பட வேண்டியதில்லை என்று நிறுவனம் கூறியுள்ளது. கூடுதலாக, இந்த போன் 1 ஆண்டு ரீபிளேஸ்மென்ட் உறுதிமொழியுடன் வருகிறது.

கூடுதல் அம்சங்கள்

கூடுதல் அம்சங்கள்

லாவா பல்ஸ் 1 பியூச்சர் போன் நம்பர் டாக்கர், சிறிய புகைப்படங்களுடன் காண்டாக்ட் ஸ்டோரேஜ், ரெக்கார்டிங் உடன் கூடிய வயர்லெஸ் எஃப்எம் மற்றும் டூயல் சிம் ஆதரவு போன்ற அம்சங்களுடன் வருகிறது. இந்த பியூச்சர் போன் ஆங்கிலம், இந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு, குஜராத்தி மற்றும் பஞ்சாபி உள்ளிட்ட 7 மொழிகளில் மெசேஸ்ஜ் உள்ளீட்டை ஆதரிக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Lava Pulse 1 feature phone with contactless thermometer launched for Rs 1,999 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X