ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.12,499-க்கு SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 33W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
லாவா பிளே அல்ட்ரா (Lava Play Max) ஸ்மார்ட்போன் இந்திய மார்கெட்டில் அறிமுகமாக இருப்பதால், முந்தைய மாடலான லாவா பிளே அல்ட்ரா (Lava Play Ultra) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. அமேசான் தளத்தில் விலை குறைப்பு மற்றும் பேங்க் தள்ளுபடியுடன் வாங்க கிடைக்கிறது. இந்த லாவா மாடலின் முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.
6 ஜிபி ரேம் + 6 ஜிபி விர்ச்சுவல் ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.14,999 பட்ஜெட்டில் அறிமுகமானது. இப்போது, லாவா பிளே அல்ட்ரா வெளியாக இருப்பதால், ரூ.2,000 விலை குறைப்பு போக அமேசான் தளத்தில் ரூ.12,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. மேலும், ரூ.500 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.12,4999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

லாவா பிளே அல்ட்ரா அம்சங்கள் (Lava Play Ultra Specifications): ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.67 (1080 x 2400 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவுக்கு 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைத்துள்ளது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் கிடைக்கிறது.
1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் சப்போர்ட் கொண்டுள்ளது. 4என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 4nm) சிப்செட்டை கொடுத்துள்ளது. மேலும், மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டை கொடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்டுள்ளது.
2 ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் 2 வருட செக்யூரிட்டி அப்டேட்களை இந்த லாவா பிளே அல்ட்ரா ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. கேமராவை பொறுத்தவரையில், சோனி ஐஎம்எக்ஸ்682 (Sony IMX682) சென்சாருடன் 64 எம்பி மெயின் கேமரா கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கொடுக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், 5 எம்பி மேக்ரோ லென்ட் சப்போர்ட் கிடைக்கிறது. நைட் மோட் (Night Mode), ஏஐ என்ஹான்ஸ்மெண்ட் (AI Enhancements), ப்ரோ மோட் (Pro Mode), ப்ரோ வீடியோ (Pro Video), டூயல் வியூ வீடியோ (Dual View Video) மற்றும் மேக்ரோ போட்டோகிராபி (Macro Photography) கிடைக்கிறது. போர்ட்ராய்டு, பியூட்டி, எச்டிஆர் போன்ற வழக்கமாக கேமரா அம்சங்களும் இருக்கின்றன.
வீடியோ கால்கள் மற்றும் செல்பீகளுக்காக 13 எம்பி செல்பீ கேமராவை இந்த லாவா பிளே அல்ட்ரா ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரிக்கு 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் கிடைத்துள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) இருக்கிறது.
டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கும்படி IP64 ரேட்டிங் கிடைக்கிறது. ஆர்க்டிக் ஃப்ரோஸ்ட் (Arctic Frost) மற்றும் ஆர்க்டிக் ஸ்லேட் (Arctic Slate) ஆகிய கலர்களில் வாங்கி கொள்ளலாம். 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ, வை-பை 6இ, ப்ளூடூத் 5.2 மற்றும் ஜிபிஎஸ் கனெக்டிவிட்டி உள்ளது. லாவா பிளே மேக்ஸ் போனில் 50 எம்பி மெயின் கேமரா வர இருக்கிறது.
இதிலும் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 சிப்செட் கிடைக்க இருக்கிறது. அதேபோல 6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட்களை எதிர்பார்க்கலாம். மேலும், 6.72 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. ஆண்ட்ராய்டு 15 கிடைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் எதிர்பார்க்கலாம். ரூ.15,000 பட்ஜெட்டில் ஆரம்ப விலை இருக்கும்.


Click it and Unblock the Notifications








