வெச்சி செஞ்சிட்டாங்க.. பட்ஜெட்ல 64MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. 33W சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்தியாவில் இருக்கும் கேமிங் பிரியர்களுக்காக பிரத்யேக மாடலாக லாவா நிறுவனத்தின் லாவா பிளே அல்ட்ரா 5ஜி (Lava Play Ultra 5G) களமிறங்க இருக்கிறது. இப்போது, டிஸ்பிளே, சிப்செட், பேட்டரி போன்ற பீச்சர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கின்றன. லாவா பிளே சீரிஸ் (Lava Play Series) கீழ் வெளியாகும் முதல் மாடலாக இந்த லாவா பிளே அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கப்போகிறது. இதுகுறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
லாவா மொபைல்ஸ் ஒரு இந்திய நிறுவனமாக இருப்பதால், அதன் மாடல்களுக்கு தனி வரவேற்பு இருக்கிறது. இந்த நிறுவனத்தில் பிளேஸ் சீரிஸ், யுவா சீரிஸ், ஸ்டார்ம் சீரிஸ், அக்னி சீரிஸ், ஓ சீரிஸ், ஷார்க் சீரிஸ் மற்றும் போல்டு சீரிஸ் ஆகியவற்றின் கீழ் பல்வேறு பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் வெளியாகி இருக்கின்றன. இதில் பிளே சீரிஸ் புதியாக சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த சீரிஸில் கிடைக்க இருக்கும் ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலை கேமிங் மாடல்களாக இருக்கும் என்பதை லாவா நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதில் முதல் மாடலாக லாவா பிளே அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது நாளை (ஆகஸ்ட் 20) இரவு 8 மணிக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. லாவா மொபைல்ஸ் (Lava Mobiles) யூடியூப் தளத்தில் வெளியீட்டு நிகழ்வு நடக்கிறது.
இந்த லாவா பிளே அல்ட்ரா 5ஜி போனின் டிசைன், கேமரா, சிப்செட், பேட்டரி போன்ற பீச்சர்கள் ஏற்கனவே மார்கெட்டில் கசிந்தன. ஆனால், லாவா நிறுவனம் அதை உறுதி செய்யாமல் இருந்தது. இப்போது, அதிகாரப்பூர்வமாக பீச்சர்களை உறுதி செய்திருக்கிறது. அதேபோல பட்ஜெட் செக்மெண்ட்டையும் உறுதி செய்துள்ளது. முதலில் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
லாவா பிளே அல்ட்ரா 5ஜி அம்சங்கள் (Lava Play Ultra 5G Specifications): கேமிங் மாடலா இருப்பதால், ஹைப்பர்என்ஜின் (HyperEngine) கேமிங் ஆப்டிமைசேஷன் கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 7300 (MediaTek Dimensity 7300) சிப்செட் கிடைக்கிறது. அதேபோல ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட பிளாட் டிஸ்பிளே டிசைனில் 6.67 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொடுக்கிறது.
இந்த டிஸ்பிளேவுக்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1,000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. பட்ஜெட் மாடலாக இருப்பதால் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி கொண்ட பேக்கப் சிஸ்டம் கிடைக்கிறது. சோனி (SONY) சென்சாருடன் 64 எம்பி மெயின் கேமரா மற்றும் 13 எம்பி செல்பீ கேமராவை கொடுக்கிறது. இந்த லாவா போனுக்கு IP64 ரேட்டிங் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது.
ரூ.20,000 பட்ஜெட்டுக்கும் கீழ் விலை கொண்ட மாடலாக இந்த லாவா பிளே அல்ட்ரா 5ஜி வெளியாக இருக்கிறது. இதுவரை பார்த்த பீச்சர்களை லாவா நிறுவனமே உறுதி செய்துள்ளது. புதிய சீரிஸ் கீழ் வெளியாக இருப்பதால், டிசைனும் மாற்றப்பட்டு இருக்கிறது. கேமரா டிசைன் ஐக்யூ மாடல்களை போல் இருக்கிறது. இதில் 2 கலர் வேரியண்ட்கள் இருக்கின்றன.
ஒயிட் (White) மற்றும் பிளாக் (Black) கலர்களில் எதிர்பார்க்கலாம். ரியல்மி, ரெட்மி, போகோ, ஐடெல் போன்ற நிறுவனங்களுக்கு நிகராக இந்தியாவின் லாவா நிறுவனம் ஸ்மார்ட்போன்களை களமிறக்கி வருகிறது. டிசைனிலும் பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு நிகராக வெளியாகி வருகின்றன. இப்போது, சிப்செட், கேமரா போன்ற பீச்சர்களில் லாவா கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறது.


Click it and Unblock the Notifications








