Home
Mobile

ஆக்.20-க்கு அப்புறம் இதுதான்.. 64MP கேமரா.. 3D டிஸ்பிளே.. பட்ஜெட்ல வருது புது லாவா 5G போன்.. எந்த மாடல்?

இந்தியாவில் பட்ஜெட் விலையில் கேமிங் மாடல்களை எதிர்பார்க்கும் ஸ்மார்ட்போன் பிரியர்களை தட்டித் தூக்கும்படியான விலை மற்றும் பீச்சர்களுடன் லாவா பிளே அல்ட்ரா 5ஜி (Lava Play Ultra 5G) வெளியாக இருக்கிறது. இப்போது வெளியீட்டு தேதி மற்றும் விற்பனை விவரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த லாவா பிளே அல்ட்ரா 5ஜி போனின் பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

லாவா நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் வெளியாகி வருகின்றன. கடந்த வாரம் லாவா பிளேஸ் அமோலெட் 2 5ஜி (Lava Blaze AMOLED 2 5G) மாடலானது வெறும் ரூ.14,000 பட்ஜெட்டில் வெளியாகி மார்கெட்டில் மிகப்பெரும் வரவேற்பு பெற்றது. இப்போது, இந்த வாரத்தில் லாவா பிளே அல்ட்ரா 5ஜி மாடலை வெளியிட திட்டமிட்டுள்ளது.

ஆக்.20-க்கு அப்புறம் இதுதான்.. 64MP கேமரா.. 3D டிஸ்பிளே.. எந்த மாடல்?

ஆகஸ்ட் 20ஆம் தேதி லாவா பிளே அல்ட்ரா 5ஜி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. கேமிங் பிரியர்களுக்கான மாடலாக இருக்கும் என்பதை டீசர் மற்றும் போஸ்டர்கள் மூலம் உறுதி செய்துள்ளது. அதே நேரத்தில் அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு வருவதை உறுதி செய்யும் விதமாக மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டு இருக்கிறது.

64 எம்பி கேமரா மற்றும் 3டி கர்வ்ட் டிஸ்பிளே ஆகிய விவரங்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன. டிசைன் விவரங்களும் வெளியாகிவிட்டன. மற்ற பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துவிட்டன. எக்ஸ் தளத்தில் கசிந்த பீச்சர்கள் மற்றும் பட்ஜெட் செக்மெண்ட்டை லாவா மொபைல்ஸ் ரீட்வீட் செய்துள்ளது.

லாவா பிளே அல்ட்ரா 5ஜி அம்சங்கள் (Lava Play Ultra 5G Specifications): இந்த லாவா போனில் 6.67 இன்ச் 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே மற்றும் அந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்க இருக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எஸ்ஓசி (MediaTek Dimensity 7300 SoC) கிடைக்க இருக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் எதிர்பார்க்கலாம்.

ஆக்.20-க்கு அப்புறம் இதுதான்.. 64MP கேமரா.. 3D டிஸ்பிளே.. எந்த மாடல்?

64 எம்பி மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்682 (Sony IMX682) சென்சார் கிடைக்க இருக்கிறது. இந்த லாவா பிளே அல்ட்ரா 5ஜி போனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வர இருக்கிறது. கேமிங் மாடலாக இருப்பதால், டுயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers) மட்டுமல்லாமல், நாய்ஸ் கேன்சலேஷன் கொண்ட டூயல் மைக் கிடைக்க இருக்கிறது.

அதேபோல கேம்பூஸ்ட் மோட் (Gameboost Mode) கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே கசிந்துள்ளன. அதேபோல ரூ.15,000 பட்ஜெட்டில் இந்த லாவா பிளே அல்ட்ரா 5ஜி போன் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பு வெளியான மாடல்களும் அதே பட்ஜெட் செக்மெண்ட்டிலேயே இருந்தன. ஆகவே, இதையும் அப்படி எதிர்பார்க்கலாம்.

முன்னதாக வெளியான லாவா பிளேஸ் அமோலெட் 2 போனும் ரூ.13,499 பட்ஜெட்டில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது. அமேசான் தளத்தில் விற்பனை தொடங்கிவிட்டது. இந்த விலைக்கு 6.67 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ் 752 (Sony IMX752) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது.

மேலும், ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மட்டுமல்லாமல், இந்த பட்ஜெட்டிலும் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7060 எஸ்ஓசி (Octa Core MediaTek Dimensity 7060 SoC) சிப்செட்டை கொடுத்தது. இறுதியாக 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரியை கொடுக்கிறது. இந்த போன் வெளியாக ஒரே வாரத்தில் அடுத்த மாடல் வெளியாக இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Play Ultra 5G With 64MP Camera To Launch in India on August 20 Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X