Home
Mobile

அமேசான் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. 64MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் லாவா நிறுவனத்தின் பிளே அல்ட்ரா 5ஜி (Play Ultra 5G) ஸ்மார்ட்போனின் விற்பனை தள்ளுபடி போக தொடங்கி இருக்கிறது. பட்ஜெட் விலை கேமிங் மாடலாக கிடைக்கும் இந்த பிளே அல்ட்ராவில் ஃபுல்எச்டிபிளஸ் அமோலெட் டிஸ்பிளே, 64 எம்பி சோனி கேமரா, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி கிடைக்கிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட் கொண்ட இந்த லாவா ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள், விலை விவரங்கள் இதோ.

இந்திய மார்கெட்டில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.14,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.16,499ஆகவும் இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.1,000 டிஸ்கவுண்ட் போக வாங்க கிடைக்கிறது. ஆகவே, 6 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.13,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது.

அமேசான் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. 64MP கேமரா.. மாடல்?

அதேபோல 8 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.15,499 பட்ஜெட்டில் கிடைக்கிறது. மேலும், 8 ஜிபிக்கான டைனாமிக் ரேம் மற்றும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் கிடைக்கிறது. 2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்களையும், 3 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களையும் கொடுத்து இருக்கிறது. கேமராவில் ஏகப்பட்ட ஏஐ பீச்சர்கள் கிடைக்கின்றன.

IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) போன்ற பீச்சர்களுடன் டிசைனில் பின்னியெடுக்கிறது. ஆர்டிக் ப்ரோஸ்ட் (Arctic Frost) மற்றும் ஆர்டிக் ஸ்லேட் (Arctic Slate) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

லாவா பிளே அல்ட்ரா 5ஜி அம்சங்கள் (Lava Play Ultra 5G Specifications): இந்த லாவாவிஸ் 6.67 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 394 பிபிஐ பிக்சன் டென்சிட்டி உள்ளது.

அமேசான் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. 64MP கேமரா.. மாடல்?

இதுபோக 900 நிட்ஸ் எச்பிஎம் மோட், பி3 கலர் காமட் மற்றும் 16.7 மில்லியன் கலர் டெப்த் கிடைக்கிறது. பட்ஜெட்டுக்கு ஏற்ப கேமிங் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 4nm) சிப்செட் கிடைக்கிறது. வழக்கமாக கிடைக்கும் மாலி ஜி615 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.

இந்த லாவா பிளே அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனில் 64 எம்பி மெயின் கேமரா மற்றும் 5 எம்பி மேக்ரோ கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவில் சோனி ஐஎம்எக்ஸ்682 (Sony IMX682) சென்சார் மற்றும் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் 4K வீடியோ ரெக்கார்டிங் கொடுத்து இருக்கிறது. நைட் மோட், எச்டிஆர் மோட், போர்ட்ராய்டு மோட் உள்ளன.

13 எம்பி செல்பீ கேமராவை கொடுக்கிறது. இந்த அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி கொண்ட பேக்கப் சிஸ்டம் கிடைக்கிறது. டைப்-சி சார்ஜிங் போர்ட் (Type-C Charging Port) மற்றும் டைப்-சி ஆடியோ (Type-C Audio) சப்போர்ட் கிடைக்கிறது. இதில் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA) மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) உள்ளது.

ஹைப்பர் என்ஜின் டெக்னாலஜி மற்றும் கேம் பூஸ்டர் போன்ற கேமிங் பிரியர்களுக்கான பிரத்யேக பீச்சர்களையும் இது கொடுக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் கிடைப்பதால், லேட்டஸ்ட் யுஐ கிடைக்கிறது. பட்ஜெட் விலையில் கேமிங் ஸ்மார்ட்போன்களை தேடிக்கொண்டிருக்கும் கஸ்டமர்களுக்கு இந்த லாவா பிளே அல்ட்ரா 5ஜி பக்காவாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Play Ultra 5G With 64MP Camera Available At Rs 13999 in Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X