Home
Mobile

நாளைக்கு இந்தியாவில் லான்ச் ஆகும் புது Lava 5ஜி போன்.. AMOLED டிஸ்பிளே.. சோனி கேமரா.. எந்த மாடல்?

லாவா நிறுவனம் லாவா பிளே அல்ட்ரா 5ஜி (Lava Play Ultra 5G) ஸ்மார்ட்போனை நாளை (ஆகஸ்ட் 20) இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த புதிய லாவா ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும். இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த புதிய லாவா ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

லாவா பிளே அல்ட்ரா 5ஜி அம்சங்கள் (Lava Play Ultra 5G specifications): 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் இந்த புதிய லாவா பிளே அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைக்கு இந்தியாவில் லான்ச் ஆகும் புது Lava 5ஜி போன்..  எந்த மாடல்?

சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எஸ்ஒசி (MediaTek Dimensity 7300 SoC) வசதியுடன் லாவா பிளே அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் கேம்பூஸ்ட் மோட் உள்ளிட்ட பல கேமிங் அம்சங்கள் இந்த போனில் உள்ளன. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

64 எம்பி சோனி ஐஎம்எக்ஸ்682 (Sony IMX682) மெயின் கேமரா + டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமராவுடன் லாவா பிளே அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த லாவா பிளே அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது லாவா நிறுவனம்.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்( In-display Fingerprint Sensor) வசதி இந்த லாவா போனில் உள்ளது. மேலும் டுயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers), நாய்ஸ் கேன்சலேஷன் கொண்ட டூயல் மைக், 3.5எம்எம் ஆடியோ ஜாக் (3.5mm audio jack) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உடன் லாவா பிளே அல்ட்ரா 5ஜி போன் அறிமுகம் செய்யப்படும்.

5000எம்ஏஎச் பேட்டரி உடன் லாவா பிளே அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் லாவா பிளே அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் உள்ளன. மேலும் ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.20,000-க்கு கீழ் இந்த புதிய லாவா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Play Ultra 5G will be launched in India tomorrow: check price, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X