Home
Mobile

அமேசான் அதிரடி ஆஃபர்.. சோனி கேமரா.. AMOLED டிஸ்பிளே.. கம்மி விலையில் LAVA 5ஜி போன்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் இப்போது அமேசான் கிரேட் ரிபப்ளிக் டே சேல் 2026 (Amazon Great Republic Day Sale 2026) எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் தரமான லாவா பிளே அல்ட்ரா 5ஜி (Lava Play Ultra 5G) மாடல் சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது.

அதாவது அமேசான் சிறப்பு விற்பனையில் லாவா பிளே அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 6 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.15,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த போனை ரூ.14,999 விலையில் வாங்கிவிட முடியும்.

அமேசான் அதிரடி ஆஃபர்.. கம்மி விலையில் LAVA 5ஜி போன்.. எந்த மாடல்?

லாவா பிளே அல்ட்ரா 5ஜி அம்சங்கள் (Lava Play Ultra 5G Specifications): சக்திவாய்ந்த ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4என்எம் (MediaTek Dimensity 7300 4nm) சிப்செட் உடன் லாவா பிளே அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali-G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவு இந்த போனில் உள்ளது.

64எம்பி சோனி ஐஎம்எக்ஸ்682 பிரைமரி கேமரா + 5எம்பி மேக்ரோ சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது லாவா பிளே அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் இந்த லாவா பிளே அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்( In-display Fingerprint Sensor) வசதியுடன் வெளிவந்துள்ளது லாவா பிளே அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன். யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உடன் இந்த லாவா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 15 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.

அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த போன். கூடுதலாக மெமரி நீங்கள் மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த லாவா ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

அமேசான் அதிரடி ஆஃபர்.. கம்மி விலையில் LAVA 5ஜி போன்.. எந்த மாடல்?

லாவா பிளே அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆர்க்டிக் ஃப்ரோஸ்ட் (Arctic Frost) மற்றும் ஆர்க்டிக் ஸ்லேட் (Arctic Slate) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் லாவா பிளே அல்ட்ரா 5ஜி போன் அறிமுகமானது. பின்பு 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத் 5.2, பீடோ, ஜிபிஎஸ், க்ளோனாஸ், கலிலியோ, யூஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த லாவா போனில் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Play Ultra 5G available at 6 percent discount in Amazon Republic Day sale 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X