Home
Mobile

அவ்ளோ தானா.. ரூ.12,999 பட்ஜெட்ல 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. புது‌ Lava போன்.. எந்த மாடல்?

இந்திய மார்க்கெட்டில் லாவா பிளே மேக்ஸ் (Lava Play Max) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் 50 எம்பி கேமரா, 120Hz டிஸ்பிளே, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட் கொண்ட இந்த லாவா பிளே மேக்ஸ் ஸ்மார்ட் போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

லாவா பிளே சீரிஸ் மாடல்கள் ரூ.15,000 பட்ஜெட்டுக்குள் வெளியாகி வருகின்றன. இந்த வரிசையில் பிரீமியம் லுக் கொடுக்கும் படியான டிசைனில் லாவா பிளே மேக்ஸ் கிடைக்கிறது. ரூ.12,000 பட்ஜெட்டுக்குள் வெளியாகி இருக்கிறது. முழு
பீச்சர்கள் பட்ஜெட்டை விட கூடுதல் பர்பார்மன்ஸ் கொடுக்கும்படி இருப்பதால் வரவேற்பு பெற வாய்ப்புள்ளது.

அவ்ளோ தானா.. ரூ.12,999 பட்ஜெட்ல புது‌ Lava போன்.. எந்த மாடல்?

லாவா பிளே மேக்ஸ் அம்சங்கள் (Lava Play Max Specifications): இந்த லாவா போனில் 6.72 இன்ச் (1080 x 2400 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் புல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மட்டுமல்லாமல் 120Hz ‌ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. ஆகவே கம்மியான பட்ஜெட்டிலும் பக்கா டிஸ்பிளே பர்ஃபார்மன்ஸ் எதிர்பார்க்கலாம். அதேபோல கேமிங் பிரியர்களையும் இது தட்டி தூக்கி இருக்கிறது.

ஏனென்றால், மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. இதுபோக பட்ஜெட் விலையில் பட்டையை கிளப்பும் பர்பாமன்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 4nm) சிப் செட் கிடைக்கிறது. பட்ஜெட் விலையில் நல்ல பர்பாமென்ஸ் வேண்டுமானால் இதுவும் ஒரு பக்காவான மாடலாகவே இருக்கிறது.

6 ஜிபி ரேம்‌ + 128 ஜிபி‌ மெமரி மற்றும் 8 ஜிபி ரேம்‌ + 128 ஜிபி‌ மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. 1 டிபிக்கு மைக்ரோஎஸ்டி கார்டு பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் வழக்கமாக கிடைக்கும் விர்ச்சுவல் ரேம் (Virtual RAM)
இந்த லாவா பிளே மேக்ஸ் ஸ்மார்ட்போனில் கிடைக்கிறது. டூயல் சிம் சிலாட்‌ (Dual SIM Slot) கிடைக்கிறது.

இந்த லாவா பிளே மேக்ஸ் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) சப்போர்ட் கிடைக்கிறது. 50 எம்பி‌ மெயின் கேமரா கொடுக்கப்படுகிறது. இந்த கேமராவில் ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கொடுக்கப்படவில்லை. இருப்பினும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Electronic Image Stabilization) டெக்னாலஜி கிடைக்கிறது. ஆகவே பட்ஜெட்டில் பக்கா கேமரா பர்பாமென்ஸ் எதிர்பார்க்கலாம்.

8 எம்பி செல்பீ கேமராவை இந்த இந்த லாவா பிளே மேக்ஸ் ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. மெயின் கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. ஆகவே, 30 எப்பிஎஸ் வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். சைடு மவுண்டெட் பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கிடைக்கிறது. இந்த விலையிலும் IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் (Dust & Water Resistant) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த லாவா பிளே மேக்ஸ் ஸ்மார்ட்போனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. 5ஜி எஸ்ஏ, என்எஸ்ஏ மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ கனெக்டிவிட்டி சப்போர்ட் கிடைக்கிறது. ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிபிஎஸ் (GPS) சப்போர்ட் கொடுக்கிறது.

லாவா பிளே மேக்ஸ் விலை (Lava Play Max Price): இந்த லாவா போனின் 6 ஜிபி ரேம்‌ + 128 ஜிபி‌ மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.12,999 ஆகவும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.14,999ஆக இருக்கிறது. டெக்கான் பிளாக் (Deccan Black) மற்றும் இமாலயன் ஒயிட் (Himalayan Whit) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.

லாவா ஸ்டோரில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஆனால் தேதி குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் டிசம்பர் மாதத்தில் விற்பனைக்கு வர இருப்பது உறுதியாகும். அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளத்திலும் விரைவில் எதிர்பார்க்கலாம். கம்மி பட்ஜெட்டில் பிரீமியம் லுக் கொடுக்கும் மாடலாக இந்த லாவா மேக்ஸ் ஸ்மார்ட்போன் இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Play Max With 50MP Camera Launched in India Under Rs 13000 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X