Home
Mobile

அடுத்த Lava போன் ரெடி.. 50எம்பி கேமரா.. ஆண்ட்ராய்டு 15 OS.. எந்த மாடல்? என்ன விலை?

லாவா நிறுவனம் அடுத்து லாவா பிளே மேக்ஸ் (Lava Play Max) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள், விலை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

லாவா பிளே மேக்ஸ் அம்சங்கள் (Lava Play Max Specifications): 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் லாவா பிளே மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ( 120Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அடுத்த Lava போன் ரெடி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?

அதேபோல் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 எஸ்ஒசி (MediaTek Dimensity 7300 SoC)சிப்செட் உடன் இந்த லாவா பிளே மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கப்படும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய லாவா பிளே மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் லாவா பிளே மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த லாவா ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

50எம்பி ரியர் கேமரா உடன் லாவா பிளே மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த புதிய லாவா ஸ்மார்ட்போனில் உள்ளன.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor), 3.5எம்எம் ஆடியோ ஜாக் (3.5mm audio jack), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த புதிய லாவா பிளே மேக்ஸ் ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது லாவா நிறுவனம்.

5000எம்ஏஎச் பேட்டரி உடன் லாவா பிளே மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
பின்பு இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் வசதியும் உள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

ஆன்லைனில் வெளியான தகவலின்படி, 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட லாவா பிளே மேக்ஸ் போன் ரூ.14,999-விலையிலும், 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.16,499 விலையிலும் அறிமுகமாகும். பின்பு கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் இந்த போன் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Play Max specifications and price revealed: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X