ஆளுக்கு 2 ஆர்டர்.. வெறும் ரூ.6999 க்கு 8GB ரேம், 50MP கேமரா, 5000mAh பேட்டரி.. புது LAVA போன் அறிமுகம்!
லாவா (Lava) நிறுவனத்தின் கீழ் விலையை மீறிய அம்சங்களை கொண்ட பல ஸ்மார்ட்போன்கள் உள்ளன. அதில் சூப்பர் பட்ஜெட் விலைப்பிரிவின் கீழ் புதிய மாடல் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இது அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம் வழியாக விற்பனைக்கும் வந்துள்ளது. என்ன மாடல்? என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:
என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது லாவா ஓ3 ப்ரோ (Lava O3 Pro) ஸ்மார்ட்போனை பற்றித்தான். இது 4ஜிபி விர்ச்சுவல் ரேம் உடன் சேர்த்து மொத்தம் 8ஜிபி ரேம், 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 10W சார்ஜிங் சப்போர்ட் உடனான 5000mAh பேட்டரி, 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.56-இன்ச் டிஸ்பிளே ஆகிய முக்கிய அம்சங்களுடன் வருகிறது.

என்ன விலை? தற்போது அமேசான் இந்தியா வலைத்தளத்தில், லாவா ஓ3 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.6,999 க்கு வாங்க கிடைக்கிறது. லாவா ஓ3 ப்ரோ ஸ்மார்ட்போனின் 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது: க்ளாஸி பிளாக், க்ளாஸி பர்பிள் மற்றும் க்ளாஸி ஒயிட்.
என்னென்ன அம்சங்கள்? டிஸ்பிளேவை பொறுத்தவரை, லாவா ஓ3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1600 X 720 பிக்சல்ஸ் ரெசல்யூசன் மற்றும் செல்ஃபி ஸ்னாப்பருக்கான பஞ்ச்-ஹோல் கட்அவுட் உடனான 6.56-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது
சிப்செட்டை பொறுத்தவரை இது யுனிசாக் டி606 ஆக்டாகோர் அப்செட் (Unisoc T606 octa-core chipset) மூலம் இயக்கப்படுகிறது. லாவா நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த ஸ்மார்ட்போனில் உள்ள சிப்செட் ஆனது அன்டுடு (AnTuTu) பெஞ்ச்மார்க்கில் 2.3 லட்சத்திற்கும் அதிகமான பாயிண்ட்களை பெற்றுள்ளது. ஓஎஸ்-ஐ பொறுத்தவரை, லாவா ஓ3 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 14 உடன் வருகிறது.
ரேம் மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களை பொறுத்தவரை இந்த சிப்செட் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. சிறந்த மல்டி டாஸ்கிங்கிற்காக இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி விர்ச்சுவல் ரேம் ஆதரவும் உள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனில் 50எம்பி ப்ரைமரி கேமராவை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது. செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை முன்புறத்தில் உள்ள 8எம்பி கேமரா பார்த்துக்கொள்ளும். பேட்டரியை பொறுத்தவரை இது 10W ஸ்டாண்டர்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. ஃபேஸ் அன்லாக் ஆதரவை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரும் உள்ளது.
அமேசானில் லாவா பிளேஸ் கர்வ் 5ஜி ஆபர்: 5ஜி சப்போர்ட் உடன் வரும் லாவா பிளேஸ் கர்வ் 5ஜி (Lava Blaze Curve 5G) ஸ்மார்ட்போனின் மீது தள்ளுபடி கிடைக்கிறது. தற்போது அமேசான் இந்தியாவில் லாவா பிளேஸ் கர்வ் 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன், அதன் அசல் விலையான ரூ.20,999 க்கு பதிலாக 31% தள்ளுபடியை பெற்று ரூ.14,499 க்கு வாங்க கிடைக்கிறது.
இதுபோல 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் அசல் விலையான ரூ.21,999 க்கு பதிலாக 30% தள்ளுபடியை பெற்று ரூ.15,499 க்கு வாங்க கிடைக்கிறது. இதோடு சேர்த்து எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு வழியிலான இஎம்ஐ பரிவர்த்தனைக்கு (6 மாதங்கள் அல்லது அத்தகு மேலாக) 10% உடனடி தள்ளுபடி (ரூ.1000 வரை தள்ளுபடி) கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








