மிரண்டுபோன மார்க்கெட்.. மலிவு விலை.. 50எம்பி கேமரா.. 5000mAh பேட்டரி.. 8ஜிபி ரேம்.. எந்த மாடல்?
இந்தியா நிறுவனம் லாவா புதிய லாவா ஓ2 (Lava O2) எனும் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய போனின் விலை, அம்சங்கள், விற்பனை தேதி உள்ளிட்ட விவரங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்ப்போம்
லாவா ஓ2 அம்சங்கள் (Lava O2 specifications):6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் லாவா ஓ2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 1600 x 720 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்(90Hz refresh rate) மற்றும் பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.

தரமான யுனிசாக் டி616 ஆக்டோ-கோர் பிராசஸர் (Unisoc T616 octa-core processor) வசதியுடன் இந்த லாவா ஓ2 போன் வெளிவந்துள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதள வசதியுடன் லாவா ஓ2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
8ஜிபி ரேம் (8ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128ஜிபி மெமரி வசதியுடன் லாவா ஓ2 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
50எம்பி ஏஐ டூயல் ரியர் கேமரா அமைப்புடன் லாவா ஓ2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் 8எம்பி செல்பி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
மெஜஸ்டிக் பர்பிள் (Majestic Purple), இம்பீரியல் கிரீன் ( Imperial Green) மற்றும் ராயல் கோல்ட் (Royal Gold) நிறங்களில் லாவா ஓ2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor)ஆதரவு இந்த போனில் உள்ளது.

லாவா ஓ2 ஸ்மார்ட்போனில் பேஸ் அன்லாக் (face unlock), ஏஜி கிளாஸ் பேக் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. குறிப்பாக வைஃபை, புளூடூத் (Bluetooth), ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.
லாவா ஓ2 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.8,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அறிமுக சலுகையாக இந்த போனை ரூ.7,999 விலையில் வாங்க முடியும். வரும் மார்ச் 27-ம் தேதி அமேசான் தளத்தில் விற்பனைக்கு வருகிறது இந்த லாவா ஓ2 போன். குறிப்பாக சீன நிறுவனங்களின் போன்களுக்கு போட்டியாக இந்த போன் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








