Home
Mobile

சிதறும் சீனா.. களத்தில் லாவா.. ரூ.10000 பட்ஜெட்ல 50MP கேமரா.. 16GB ரேம்.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

ஒட்டுமொத்த சீன நிறுவனங்களையும் ஓரங்கட்டும் பட்ஜெட்டில் பிரீமியம் டிசைனில் லாவா ஓ2 (Lava O2) போன் வெளியாக இருக்கிறது. இப்போது, அரோரா டிசைனில் கலர் வேரியண்ட்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த போனின் முக்கிய அம்சங்கள், விலை விவரங்கள் குறித்த விவரம் இதோ.

லாவா ஓ2 அம்சங்கள் (Lava O2 Specifications): இந்த லாவா மாடலில் 6.5 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display) மாடலாகும். பேஸ் அன்லாக் (Face Unlock) சப்போர்ட் வருகிறது.

ரூ.10000 பட்ஜெட்ல 50MP கேமரா.. 16GB ரேம்.. 5000mAhபேட்டரி.. எந்த போன்?

50 எம்பி மெயின் கேமரா + ஏஐ லென்ஸ் (AI Lens) கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கொண்டிருக்கிறது. இந்த கேமராவில் மல்டிபிள் கேமரா மோட்கள் (Mutiple Camera Modes) வருகின்றன. ஆகவே, ப்யூட்டி மோட், எச்டிஆர் மோட், போர்ட்ராய்டு மோட், ஏஐ மோட், ப்ரோ மோட் போன்றவனை இருக்கின்றன.

அதேபோல ஸ்லோவ் மோஷன், டைம்-லேப்ஸ், பனோரமா மற்றும் பர்ஸ்ட் போன்ற மோட்களும் வருகின்றன. இந்த லாவாவில் 8 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. 16 ஜிபி ரேம் (8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) கொண்டிருக்கிறது. அதோடு 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது.

இந்த லாவா ஓ2 போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி616 (Octa Core UNISOC T616) சிப்செட் வருகிறது. இந்த பட்ஜெட் செக்மெண்ட்டில் ஃபாஸ்டஸ்ட் போனாக இந்த லாவா ஓ2 மாடல் இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.

ரூ.10000 பட்ஜெட்ல 50MP கேமரா.. 16GB ரேம்.. 5000mAhபேட்டரி.. எந்த போன்?

பட்ஜெட் வேரியண்ட் என்பதால், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor) வருகிறது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் 5000mAh பேட்டரி வருகிறது. யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) சார்ஜிங் போர்ட் மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) வருகிறது.

இந்த லாவா ஓ2 மாடலானது, ஏஜி கிளாஸ் பேக் (AG Glass Back) மற்றும் அரோரா டிசைனில் (Aurora Design) அல்ட்ரா பிரீமியம் லுக் கொடுக்கிறது. இந்த டிசைனில் இம்பீரியல் கிரீன் (Imperial Green), மெஜஸ்டிக் பர்பிள் (Majestic Purple) மற்றும் ராயல் கோல்டு (Royal Gold) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது.

இந்த அம்சங்களை மட்டுமே லாவா இந்தியா (Lava India) நிறுவனம், அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. அமேசான் (Amazon) தளத்தில் இந்த போன் விற்பனைக்கு வருகிறது. வரும் மார்ச் 22ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த போனின் விலை விவரங்கள் வெளியாகவில்லை.

இருப்பினும், இந்த போனின் சிப்செட், டிஸ்பிளே, பேட்டரி அம்சங்களை வைத்து பார்க்கையில், ரூ.10,000 பட்ஜெட்டில் வெளியாகவே அதிக வாய்ப்புள்ளது. இதுவொரு 4ஜி மாடலாகும். ஆகவே, டூயல் 4ஜி வோஎல்டி, ப்ளூடூத் 5.3, வை-பை 803 ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava O2 With 16GB RAM, 50MP Camera Launch March 22 Sale From Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X