மார்ச் 22 உறுதி.. 50எம்பி கேமரா.. 5000எம்ஏஎச் பேட்டரி.. வருகிறது அசத்தலான போன்.. எந்த மாடல்?
இந்தியா நிறுவனம் லாவா வரும் மார்ச் 22-ம் தேதி புதிய லாவா ஓ2 (Lava O2) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனது அருமையான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
லாவா ஓ2 அம்சங்கள் (Lava O2 specifications): யுனிசாக் டி616 ஆக்டோ-கோர் பிராசஸர் (Unisoc T616 octa-core processor) வசதியுடன் இந்த லாவா ஓ2 போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். நோக்கியா போன்களில் அதிகம் இந்த யுனிசாக் சிப்செட் தான் பயன்படுத்தப்படுகிறது.

லாவா ஓ2 ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம் (8ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128ஜிபி மெமரி வசதியுடன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் லாவா ஓ2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் 8எம்பி செல்பி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
குறிப்பாக 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் லாவா ஓ2 ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் 1600 x 720 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate) மற்றும் பல்வேறு டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். பெரிய டிஸ்பிளே வசதியுடன் இந்த போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
லாவா ஓ2 ஸ்மார்ட்போன் ஸ்மார்ட்போன் மாடல் 5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த போனின் பேட்டரியை சார்ஜ் செய்ய 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor) ஆதரவுடன் இந்த போன் அறிமுகமாகும்.
அதேசமயம் இந்த புதிய போனில் பேஸ் அன்லாக் (face unlock), ஏஜி கிளாஸ் பேக் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. குறிப்பாக வைஃபை, புளூடூத் (Bluetooth), ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக இந்த போன் குறைந்த எடையில் அறிமுகமாகும்.

ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் லாவா ஓ2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது லாவா ஓ2 ஸ்மார்ட்போன்.
லாவா ஓ2 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.10,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த புதிய லாவா போன் ஆனது அமேசான் தளத்தில் வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








