சைனீஸ் போன்களுக்கு ஆப்பு.. 50MP கேமரா.. 5000mAh பேட்டரி.. கம்மி பட்ஜெட்டில் 5ஜி போன்.. எந்த மாடல்?
சீன நிறுவனங்களுக்குப் போட்டியாக இந்தியா நிறுவனம் லாவா தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை கம்மி விலையில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக லாவா நிறுவனம் அறிமுகம் செய்யும் போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது.
சமீபத்தில் லாவா நிறுவனம் லாவா பிளேஸ் கர்வ் 5ஜி (Lava Blaze Curve 5G) எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்நிலையில் மீண்டும் ஒரு அசத்தலான போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது லாவா நிறுவனம். அதாவது லாவா ஓ2 (Lava O2) எனும் ஸ்மார்ட்போனை தான் இந்நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.

தற்போது அமேசான் பக்கத்தில் இந்த லாவா ஓ2 போன் காணப்பட்டுள்ளது. எனவே வரும் வாரங்களில் லாவா ஓ2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த லாவா ஓ2 ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.
லாவா ஓ2 அம்சங்கள் (Lava O2 specifications): எல்இடி பிளாஷ் ஆதரவுடன் கூடிய டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த லாவா ஓ2 ஸ்மார்ட்போன். மேலும் பச்சை நிறத்தில் இந்த போன் அறிமுகமாகும். அதேபோல் லாவா ஓ2 போனின் அடிப்பகுதி ஸ்பீக்கர் கிரில் மற்றும் சார்ஜிங் போர்ட் உள்ளது. மேலும் இந்த போனின் வலதுபுறம் பவர் மற்றும் வால்யூம் பட்டன்கள் உள்ளன.
சக்திவாய்ந்த யுனிசாக் டி616 ஆக்டோ-கோர் பிராசஸர் (Unisoc T616 octa-core processor) உடன் லாவா ஓ2 போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் லாவா ஓ2 போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
8ஜிபி ரேம் (8ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128ஜிபி மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான லாவா ஓ2 ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
50எம்பி பிரைமரி கேமரா + ஏஐ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் லாவா ஓ2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவு இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் லாவா ஓ2 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. மேலும் 1600 x 720 பிக்சல்ஸ், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz refresh rate) மற்றும் பல்வேறு டிஸ்பிளே அம்சங்களை கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக இந்த போன் சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் லாவா ஓ2 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18 வாட்ஸ் சார்ஜிங் வசதி உள்ளது.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor), ஃபேஸ் அன்லாக் (face unlock), ஏஜி கிளாஸ் பேக், வைஃபை, புளூடூத் (Bluetooth), ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளன. குறிப்பாக இந்த போன் 5ஜி ஆதரவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் லாவா ஓ2 ஸ்மார்ட்போன் ரூ.10.000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த புதிய லாவா போன் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








