நச்சுனு பட்ஜெட்.. வெறும் ரூ.6,299 போதும்.. 7GB ரேம்.. 18W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
வெறும் ரூ.6,299 விலையில் 7ஜிபி ரேம், எச்டிபிளஸ் டிஸ்பிளே, டூயல் கேமரா, 18W சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற பக்கவான அம்சங்களுடன் லாவா ஓ1 (Lava O1) போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் அம்சங்கள் மற்றும் விற்பனை விவரங்கள் இதோ.
லாவா ஓ1 அம்சங்கள் (Lava O1 Specifications): இந்த லாவா போனில் 6.5 இன்ச் (1600 × 720 பிக்சல்கள்) ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு எச்டி பிளஸ் (HD+) டிஸ்பிளே மாடலாகும். இதில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. அதோடு வாட்டர்டிராப் நாட்ச் (Waterdrop Notch) செல்பீ கேமரா இடம் பெற்றுள்ளது.

இந்த போனில் 4 ஜிபி ரேம் + 3 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், 7 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வர இருக்கிறது. அதோடு மைக்ரோ எஸ்டி கார்டு (microSD card) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
பிளாட் பேக் பேனலுடன் (Flat Back Panel) ரெக்டங்குளர் ரியர் கேமரா செட்டப் (Rectangular Rear Camera Setup) கொண்டுள்ளது. இந்த லாவா போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட யுனிசோக் டி606 (UniSoC T606) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.
இந்த போனில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. அந்த வகையில், 13 எம்பி மெயின் கேமரா (Main Camera) + 2 எம்பி மேக்ரோ கேமரா (Macro Camera) வருகிறது. அதே போல 5 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த லாவா ஓ1 மாடலில் பக்காவான பேட்டரி செட்டப் வருகிறது.
18W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரிக்கு யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) சார்ஜிங் போர்ட் வருகிறது. அதேபோல பட்ஜெட் போன்களில் வரும் சைடு மவுண்டெட் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (Side Mounted Fingerprint Scanner) மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் (3.5mm Audio Jack) வருகிறது.
இந்த லாவா போனின் கனெக்டிவிட்டி அம்சங்களை பார்க்கையில், ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) மற்றும் வை-பை 802 (Wi-Fi 802) மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G LTE) ஆகியவை வருகின்றன. இந்த போன் 199 கிராம் எடை கொண்டுள்ளது. இதில் லைவ்லி லாவெண்டர் (Lively Lavender), ப்ரிசம் ப்ளூ (Prism Blue) மற்றும் லக்ஸ் ரெட் (Luxe Red) ஆகிய மூன்று கலர்கள் இருக்கின்றன.
இந்த போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ. 6,999ஆக நிர்யணம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையில் ரூ.700 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த போனை வெறும் ரூ.6,299க்கு வாங்கிக் கொள்ளலாம். இந்த சலுகையை அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் (Amazon Great Indian Festival Sale) பெற்றுக் கொள்ள முடியும்.
வரும் அக்டோபர் 7ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. மிகவும் மலிவான விலையில் நல்ல பேட்டரி பேக்கப், ஃபாஸ்ட் சார்ஜிங், ரேம் மற்றும் டிசைன் கொண்ட போன் வேண்டும் என்றால், இந்த லாவா ஓ1 மாடல் நல்ல தேர்வாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








