Home
Mobile

குறைந்த விலையில் லாவா Z-series ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! முழுவிவரம்.!

மிகவும் எதிர்பார்த்த Z-series ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது லாவா நிறுவனம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் குறைந்த விலையில் அதிநவீன அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. தற்சமயம் இந்நிறுவனம் லாவா Z1, லாவா Z2, லாவா Z4, லாவா Z6, உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களை தான் அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய ஸ்மார்ட்போன்களுடன் லாவா BeFIT எனப்படும் ஸ்மார்ட் பேண்ட் ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய ஸ்மார்ட்போன்களுடன் லாவா BeFIT எனப்படும் ஸ்மார்ட் பேண்ட் ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட் பேண்ட் மூலம் வெப்பநிலை, ஆக்ஸிஜன் அளவு, இதய துடிப்பு போன்றவற்றை அளவிட முடியும். குறிப்பாக லாவா BeFIT ஸ்மார்ட் பேண்ட் விலை ரூ.2,699-ஆக உள்ளது.

லாவா  Z-series ஸ்மார்ட்போன்கள் விலை

லாவா Z-series ஸ்மார்ட்போன்கள் விலை

2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட லாவா Z1 மாடலின் விலை ரூ.5,499-ஆக உள்ளது.
2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட லாவா Z2 மாடலின் விலை ரூ.6,999-ஆக உள்ளது.
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரிகொண்ட லாவா Z4 மாடலின் விலை ரூ.8,999-ஆக உள்ளது.
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரிகொண்ட லாவா Z6 மாடலின் விலை ரூ.9,999-ஆக உள்ளது.

 லாவா இசட்1 மற்றும்

வெளிவந்த தகவலின்படி லாவா இசட்1 மற்றும் லாவா BeFIT ஸ்மார்ட் பேண்ட் ஆனது வரும் ஜனவரி 26-ம் தேதி விற்பனைக்கு வரும் என்றும், லாவா இசட்2, லாவா இசட்4, லாவா இசட்6 மாடல்கள் ஜனவரி 11-ம் தேதி விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சாதனங்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் கிடைக்கும். மேலும் இப்போது லாவா இசட்1 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 ஆனது 5-இன்ச்

லாவா இசட்1 ஸ்மார்ட்போன் ஆனது 5-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 480×854 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். லாவா இசட்1 ஸ்மார்ட்போனில் 3100 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

குவாட்-கோர் மீடியாடெக்

லாவா இசட்1 ஸ்மார்ட்போன் மாடல் 1.8ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ20 பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 5எம்பி செல்பீ கேமரா மற்றும் 5எம்பி ரியர் கேமரா ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம். பின்பு ஆண்ட்ராய்டு 10 கோ எடிஷன் இயங்குதளத்தை கொண்டு வெளிவந்துள்ளது இந்த லாவா இசட்1 ஸ்மார்ட்போன். குறிப்பாக டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், மைக்ரோ யூ.எஸ்.பி. போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Lava new Z-series customisable smartphones Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X