ப்பா.. என்ன இப்படி இருக்கு.. ரூ.16,000-க்கு 8GB ரேம், 256GB மெமரி, 120Hz கர்வ்டு டிஸ்பிளே, 64MP கேமரா, 5ஜி!
ஒருபக்கம்.. "ரூ.16,000க்கு இதுக்கு மேல வேற என்ன வேணும்.. இதுவே போதும்டா சாமி!" என்று சொல்ல வைக்கும்படியான அம்சங்களை கொண்டுள்ளது. இன்னொரு பக்கம் "உண்மையாவே இது லாவா ஸ்மார்ட்போன் தானா!" என்று ஆச்சரியப்பட வைக்கிறது. என்ன போன்? என்ன விலை? இதோ விவரங்கள்:
நாம் இங்கே பேசுவது லாவா பிளேஸ் கர்வ் 5ஜி (Lava Blaze Curve 5G) ஸ்மார்ட்போனை பற்றித்தான். இந்திய அறிமுகத்திற்கு முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. லாவா பிளேஸ் கர்வ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம் + 128ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி என்கிற 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வெளியாகும்.

விலையை பொறுத்தவரை, நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான பராஸ் குக்லானி (@passionategeekz) வழியாக கிடைத்த தகவலின்படி, லாவா பிளேஸ் கர்வ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,000 முதல் ரூ.19,000 க்குள் இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் இரண்டு கலர் ஆப்ஷன்களில் வரும் என்றும் கூறப்படுகிறது.
என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? உறுதிப்படுத்தப்பட்ட அம்சங்களை பொறுத்தவரை, இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும் மற்றும் ரியர் கேமரா செட்டப்பில் 64-மெகாபிக்சல் மெயின் கேமராவை பேக் செய்யும்.

எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 சிப்செட் (MediaTek Dimensity 7050 SoC) மூலம் இயக்கப்படும். இந்த சிப்செட் அன்டுடு (AnTuTu) இணையதளத்தில் 5,50,000 க்கு மேலான மதிப்பெண்களை பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜையும் பேக் செய்யலாம்.
இதுதவிர்த்து லாவா பிளேஸ் கர்வ் 5ஜி ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள் மற்றும் சரியான வெளியீட்டு தேதி குறித்து எந்த தகவலும் இல்லை. இது கடந்த ஆண்டு நவம்பரில் விற்பனைக்கு வந்த லாவா பிளேஸ் 2 5ஜி (Lava Blaze 2 5G) ஸ்மார்ட்போனிற்கு அடுத்ததாக வரும் மாடல் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

லாவா பிளேஸ் 2 5ஜி-யின் விலை நிர்ணயம் என்ன? இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.9,999 க்கும், 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.10,999 க்கும் வாங்க கிடைக்கிறது. இது கிளாஸ் பிளாக், கிளாஸ் ப்ளூ மற்றும் கிளாஸ் லாவெண்டர் கலர் ஆப்ஷன்களில் லாவா இ-ஸ்டோர் மற்றும் அமேசான் வழியாக விற்பனை செய்யப்படுகிறது.
லாவா பிளேஸ் 2 5ஜி மாடலின் முக்கிய அம்சங்கள்: டூயல் சிம் (நானோ) ஆதரவுடன் வரும் லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 720x1600 பிக்சல்ஸ் உடனான 6.56-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது செல்பீ கேமராவிற்கான ஹோல் பஞ்ச் கட்அவுட்டை கொண்ட 2.5டி கர்வ்டு டிஸ்பிளேவாகும்.
ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6020 சிப்செட் உடன் வரும் லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6ஜிபி வரையிலான ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. விர்ச்சுவல் ரேம் அம்சத்தின் வழியாக இந்த ஸ்மார்ட்போனின் பயன்படுத்தப்படாத ஸ்டோரேஜை ரேம் ஆக கடன் வாங்கி, அதை மொத்தம் 12ஜிபி ஆக அதிகரிக்கவும் முடியும்.
இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை, இந்த லாவா ஸ்மார்ட்போனில் 128ஜிபி வரையிலான இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. பிரத்யேக எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக இதை 1டிபி வரை விரிவாக்கவும் முடியும். கேமராக்களை பொறுத்தவரை, லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போனில் எல்இடி ஃப்ளாஷ் (LED Flash) உடனான டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.
அதில் 50 மெகாபிக்சல் மெயின் கேமரா + 0.08 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா உள்ளது. முன்பக்கத்தில், செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய, ஸ்கிரீன் ஃபிளாஷ் ஆதரவு (Screen Flash Support) உடனான 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.
பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (Finger Print Sensor) உடன் வரும் இந்த லாவா ஸ்மார்ட்போனில் ஃபேஸ் அன்லாக் (Face Unlock) அம்சமும் உள்ளது.கடைசியாக லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 18வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications