ஆபர் விலையில் அடிச்சு நொறுக்கும் ஆர்டர்.. 5ஜி, 66W சார்ஜிங், 50MP EIS செல்பீ, IP64, 5000mAh பேட்டரி!
இந்திய மொபைல் பிராண்ட் ஆன லாவாவின் (Lava) லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆக கடந்த வாரம் அறிமுகமான லாவா அக்னி 4 5ஜி (Lava Agni 4) மாடலின் விற்பனை இன்று (நவம்பர் 25 ஆம் தேதி) முதல் தொடங்கியது. சுவாரசியமாக அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக இது ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது.
லாவா அக்னி 4 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்தியாவில் லாவா அக்னி 4 5ஜி ஸ்மார்ட்போனின் சிங்கிள் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ. 22,999 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இருப்பினும் இந்த விலை (ரூ.22,999) டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு சலுகைகளை உள்ளடக்கிய அறிமுக விலை (Introductory price) என்று லாவா நிறுவனம் கூறுகிறது. அதாவது சில நாட்கள் அல்லது வாரங்கள் கழித்து இந்த விலை அதிகரிக்கப்படலாம் என்று அர்த்தம். தற்போதைக்கு இந்த ஸ்மார்ட்போன் குறிப்பிட்ட ஆபர் விலையில் பாண்டம் பிளாக் மற்றும் லூனார் மிஸ்ட் ஆகிய 2 கலர் ஆப்ஷன்களில் அமேசான் இந்தியா வழியாக வாங்க கிடைக்கிறது.
லாவா அக்னி 4 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:
- ஸ்டாக் ஆண்ட்ராய்டு 15 கொண்டு இயங்குகிறது. இது மூன்று ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் நான்கு வருட செக்யூரிட்டி அப்டேட்களை பெறும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2400 நிட்ஸ் லோக்கல் பீக் ப்ரைட்னஸ் மற்றும் 446 பிபிஐ டென்சிட்டி உடனான 6.67-இன்ச் பிளாட் AMOLED டிஸ்பிளே
- லாவாவின் கூற்றுப்படி முன்பக்கத்தில் 1.7 மிமீ சம பக்க பெசல்கள் மற்றும் பின்புறத்தில் ஒரு மேட் ஏஜி கிளாஸுடன் கூடிய அலுமினியம் அலாய் மெட்டல் பிரேமை கொண்டுள்ளது.
- மேம்பட்ட டிராப் பாதுகாப்பிற்காக சூப்பர் ஆன்டி-ட்ராப் டயமண்ட் பிரேம், ஸ்க்ரீனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் மற்றும் ஐபி64 தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பு மதிப்பீட்டையும் கொண்டுள்ளது.
- வெட் டச் கண்ட்ரோல் அம்சம்: இது ஈரமான அல்லது எண்ணெய் நிறைந்த கைகளுடன் கூட ஸ்க்ரீனை பயன்படுத்த அனுமதிப்பதாக கூறப்படுகிறது.
- மீடியாடெக் டைமன்சிட்டி 8350 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 8GB LPDDR5X ரேம் மற்றும் 256GB UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
- ஹீட்டிங்கை நிர்வகிப்பதற்காக 4,300 சதுர மிமீ வெப்ப சிதறல் பகுதியுடன் கூடிய விசி லிக்விட் கூலிங் சிஸ்டமை கொண்டுள்ளது
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- எப்/1.88 அபெர்க்ஷர் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடனான 50-மெகாபிக்சல் பிரைமரி கேமரா
- 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ்
- செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கு எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) உடனான 50-மெகாபிக்சல் செல்பீ கேமரா
- முன் மற்றும் பின்புற கேமராக்கள் இரண்டும் 4K 60fps வரை வீடியோ பதிவை ஆதரிக்கின்றன
- லாவாவின் சொந்த வாயு ஏஐ (LAVA Vayu AI). இதன் கீழ் பல வகையான ஏஐ அம்சங்கள் அணுக கிடைக்கும்.
- 66W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரி: இது 19 நிமிடங்களில் 50 சதவீதம் வரை சார்ஜ் ஆகும் என்று லாவா நிறுவனம் கூறுகிறது.
- பாதுகாப்பிற்காக இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- ஃபேஸ் அன்லாக்
- ஆப் லாக்
- ஆன்டி-தெஃப்ட் அலாரம்
- ஆன்டி-பீப்பிங்
- 5ஜி, 4ஜி LTE, வைஃபை 6இ, ப்ளூடூத் 5.4, யுஎஸ்பி 3.2 டைப்-C மற்றும் ஐஆர் பிளாஸ்டர்
- டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் மைக்ரோஃபோனையும் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








