கைக்கொடுப்பது கடமை, விடாமுயற்சியில் இந்திய நிறுவனமான Lava.. இந்த டைம் மிஸ் ஆகாது!

|

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையை ஆக்கிரமித்த நிறுவனங்களில் பெரும்பாலானவை வெளிநாட்டு நிறுவனங்கள் தான். உள்நாட்டு நிறுவனமான லாவா.. தொடர்ந்து பல்வேறு விலைப்பிரிவு ஸ்மார்ட்போன்களை புதுப்புது அம்சங்களுடன் அறிமுகம் செய்து வருகிறது.

ஆனால் இதில் எந்த ஸ்மார்ட்போனும் வாடிக்கையாளர்கள் மத்தியில் போதிய வரவேற்பை பெறுவதில்லை. இருப்பினும் நிறுவனம் விடாமுயற்சியுடன் செயல்பட்டு வருகிறது. அதன்படி ஒரு புது ஸ்மார்ட்போனை லாவா களமிறக்க இருக்கிறது.

பிளேஸ் ப்ரோ என்ற புதிய ஸ்மார்ட்போன்

பிளேஸ் ப்ரோ என்ற புதிய ஸ்மார்ட்போன்

உள்நாட்டு ஸ்மார்ட்போன் நிறுவனமான லாவா.. பிளேஸ் ப்ரோ என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட லாவா பிளேஸ் இன் நேரடி வாரிசாக இருக்கும் என கூறப்படுகிறது.

லாவா இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போனை இந்த மாத இறுதியில் வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

விரைவில் அறிமுகமாகும் Lava Blaze Pro

விரைவில் அறிமுகமாகும் Lava Blaze Pro

உள்நாட்டு ஸ்மார்ட்போன் நிறுவனமான லாவா இந்த மாத இறுதியில் புது ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்வதை உறுதிப்படுத்தியுள்ளது.

லாவாவின் இந்த ஸ்மார்ட்போன் Lava Blaze Pro ஆகும். சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட லாவா பிளேஸ் இன் வாரிசாக இந்த ஸ்மார்ட்போன் இருக்கும் என கூறப்படுகிறது.

அறிமுக தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும் சில முக்கிய அம்சங்கள் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

50 எம்பி டிரிபிள் ரியர் கேமரா

50 எம்பி டிரிபிள் ரியர் கேமரா

Blaze Pro ஸ்மார்ட்போனின் பின்புற பேனலில் 6X ஜூம் ஆதரவுடன் 50 எம்பி டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இடம்பெறும் என கூறப்படுகிறது.

Lava Blaze Pro ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை ஸ்கேனர் ஆதரவு இருக்கும் எனவும் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே

5000 எம்ஏஎச் பேட்டரி என்று குறிப்பிடுவதன் மூலம் இந்த ஸ்மார்ட்போன் நீடித்த பேட்டரி ஆயுளை வழங்கும் என்பது ஏறத்தாழ முடிவு செய்ய முடிகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் HD+ நாட்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

ப்ரீமியம் உருவாக்க தர ஆதரவு

ப்ரீமியம் உருவாக்க தர ஆதரவு

வெளியீட்டுத் தேதி குறித்த தகவல் சரியாக தெரியவில்லை என்றாலும் Lava Blaze Pro "ப்ரீமியம் உருவாக்க தரம் மற்றும் தரமான செயல்திறனை" கொண்டிருக்கும் என்று நிறுவனம் சில அதிகாரப்பூர்வ டீஸர்கள் மூலம் உறுதிப்படுத்துகிறது.

லாவா இதுவரை அறிமுகம் செய்த விலைப்பிரிவில் இருந்து லாவா பிளேஸ் ப்ரோ மாறுபட்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.

நான்கு வண்ண விருப்பங்கள் மற்றும் கைரேகை ஸ்கேனர்

நான்கு வண்ண விருப்பங்கள் மற்றும் கைரேகை ஸ்கேனர்

நிறுவனம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ டீஸர் இல், எல்இடி ஃப்ளாஷ் உடன் கூடிய டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இதில் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் க்ரீன், மஞ்சள், ப்ளூ மற்றும் ஆஃப் ஒயிட் ஆகிய நான்கு விருப்பங்களில் வெளியாகும் என போஸ்டரில் உள்ள புகைப்படம் மூலம் கணிக்கப்படுகிறது.நிறுவனம் இந்த வண்ணங்களின் பெயரை தெளிவுப்படுத்தவில்லை.

மற்றொரு டீஸரில் ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் கைரேகை ஸ்கேனர் இடம்பெறும் என்பது காட்டப்பட்டுள்ளது.

இந்த மாத இறுதியில் அறிமுகம்

இந்த மாத இறுதியில் அறிமுகம்

Lava Blaze Pro இந்த மாத இறுதியில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் நாட்களில் நிறுவனத்திடம் இருந்து ஸ்மார்ட்போன் அம்சங்கள் குறித்த தகவல் ஒவ்வொன்றாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லாவா பிளேஸ் விலை

லாவா பிளேஸ் விலை

இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஜூலை மாதம் வெளியான லாவா பிளேஸ் இன் வாரிசாக இருக்கும் என கூறப்படுகிறது. எனவே லாவா பிளேஸ் இன் விலை என்ன என்று தெரிந்துக் கொண்டால் இந்த ஸ்மார்ட்போனின் விலை கிட்டத்தட்ட கணித்துவிடாலம்.

நினைப்பது போல் லாவா பிளேஸ் விலை ஒன்றும் அவ்வளவு அதிகம் இல்லை. லாவா பிளேஸ் இன் 3 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.8699 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

இது மலிவு விலை ஸ்மார்ட்போனாகும். எனவே விரைவில் அறிமுகமாகும் ப்ரோ மாடல் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Lava Launching its Lava Blaze Pro Smartphone Soon in India: Expected price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X