ரூ.4,199 முதல் ரூ.8,999/-க்குள் அசத்தல் அம்சங்கள் கொண்ட லாவா கருவிகள்.!

லாவா எக்ஸ்41 ப்ளஸ் கருவியின் சிறப்பம்சங்களுடன் சேர்த்து லாவா எக்ஸ்50, லாவா எக்ஸ்50 ப்ளஸ், லாவா ஏ51 மற்றும் பல கருவிகளின் அம்சங்களை பற்றிய தொகுப்பே இது.

|

உள்நாட்டு ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான லாவா நிறுவனம் அதன் புதிய எக்ஸ்41 பிளஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ரூ 8,999/- என்ற விலை நிர்ணயம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 4ஜி ஆதரவுடன் ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ கொண்டு இயங்குகிறது. நிறுவனத்தின் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள இந்த எக்ஸ்41 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது விரைவில் உங்களின் கைகளுக்கு எட்டும்.

லாவா எக்ஸ்41 ப்ளஸ் கருவியின் இதர சிறப்பம்சங்களுடன் சேர்த்து லாவா எக்ஸ்50, லாவா எக்ஸ்50 ப்ளஸ் மற்றும் லாவா ஏ51ஆகிய கருவிகளின் அம்சங்களை பற்றிய விரிவான தொகுப்பே இது.

லாவா எக்ஸ்41 ப்ளஸ்

லாவா எக்ஸ்41 ப்ளஸ்

720x1280 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 2 பாதுகாப்பு கொண்ட 5 இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்ட எக்ஸ் 41 + ஸ்மார்ட்போன் ஆனது இரட்டை சிம் ஆதரவுடன் (ஒரு சிம் 4ஜி ஸ்லாட்) 2500எம்ஏச் பேட்டரித்திறன் ஆதரவும் கொண்டுள்ளது. டச் ப்ரீ ஏர் கெஸ்டர் அம்சம் கொண்டு வரும் இந்த ஸ்மார்ட்போன் ஒரு வளைந்த கண்ணாடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

லாவா எக்ஸ்50

லாவா எக்ஸ்50

மறுபக்கம் லாவா எக்ஸ் 50 ப்ளஸ் கருவி 2ஜிபி ரேம் ஜோடியாக ஒரு 1.3ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. உடன் 65000 படங்கள் வரை சேமிக்க முடியும் 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு உள்ளது. கேமரா துறையை பொறுத்தமட்டில் எல்இடி ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் முன்பக்க கேமரா மற்றும் ஆட்டோ ஃபோகஸ், எல்இடி ப்ளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது. உடன் எக்ஸ்50 கருவியின் இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை ஜிபிஆர்எஸ் / எட்ஜ், 3ஜி, வைஃபை, ப்ளூடூத், எஃப்எம் ரேடியோ, மைக்ரோ-யுஎஸ்பி, மற்றும் ஜிபிஎஸ் கொண்டுள்ளது.

லாவா எக்ஸ்50 ப்ளஸ்

லாவா எக்ஸ்50 ப்ளஸ்

லாவா எக்ஸ்50 ப்ளஸ் கருவியானது கூல்பேட் நோட் 3 பிளஸ், இன்டெக்ஸ் கிளவுட் ஸ்விஃப்ட் மற்றும் மோட்டோ ஜி ப்ளே போன்ற கருவிகளுக்கு போட்டியாக வெளியிடப்பட்ட ஒரு பட்ஜெட் போன் ஆகும். லாவா பெரும்பாலும் பட்ஜெட் போன்களை தான் (ஏ51 மற்றும் ஏ76) இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது.

ஏ51 மற்றும் ஏ76+

ஏ51 மற்றும் ஏ76+

அதேசமயம் ஏ76+, ஒரு 3ஜி ஆதரவு கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும் மறுபக்கம் ஏ51 ஸ்மார்ட்போன் ஆனது 4ஜி வோல்ட் ஆதரவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ.4,199/- மற்றும் ரூ.5,599/- விலை நிர்ணயம் கொண்டவைகள் ஆகும்.

லாவா ஏ51

லாவா ஏ51

லாவா ஏ51 கருவி ஒரு 4.5 இன்ச் எப்டபுள்யூஜிஏ (FWVGA) டிஸ்ப்ளே, 1.2ஜிகா ஹெர்ட்ஸ் அக்டாகோர் செயலி ஆதரவு கொண்டுள்ளது மற்றும் மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 32 ஜிபி நீட்டிக்கும் ஆதரவும் 8ஜிபி உள்ளடக்க சேமிப்பும் வழங்குகிறது.

ஏ76 பிளஸ்

ஏ76 பிளஸ்

மற்றொரு 4ஜி வோல்ட் சாத்தனான ஏ76 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 4.5 இன்ச் டிஸ்ப்ளே, 1ஜிபி ரேம் இணைந்து ஒரு 1.5ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்-கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது. இக்கருவி மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 32 ஜிபி வரை விரிவாக்க முடியும் வசதி கொண்ட 8ஜிபி ரோம் கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் லாவா நிறுவனம் ரூ.7,349/-க்கு அதன் எக்ஸ் 28 என்ற கருவியை அறிமுகம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஐந்து நாட்கள் வரை சார்ஜ் நிற்கும் அசத்தல் ஸ்மார்ட்போன்கள்.!

Best Mobiles in India

English summary
Lava launches X41 Plus smartphone with 4G support, Android Marshmallow at Rs 8,999. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X