இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான லாவா 4400 எம்ஏஎஹ் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனை 5399க்கு வெளியிட்டது.
ஐரிஸ் ஃபூயல் 60 மற்றும் ஐரிஸ் ஃபூயல் 50 ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அதிக பேட்டரி கொண்ட புதிய ஸ்மார்ட்போனான லாவா ஐரிஸ் ஃபூயல் 20 ஸ்மார்ட்போனை வெளியிட்டது லாவா நிறுவனம். இந்த ஸ்மார்ட்போன் 42 மணி நேர 2ஜி டாக் டைம், 13 மணி நேரம் வீடியோ ப்ளே பேக் மற்றும் 35 மணி நேர மியூசிக் ப்ளேபேக் வழங்கும் திறன் கொண்டது.

லாவா ஐரிஸ் ஃபூயல் 20, 5 இன்ச் டிஸ்ப்ளே 854*480 பிக்ஸல் ரெசல்யூஷன் மற்றும் 1.3 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர் மற்றும் 512 எம்பி ராம் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5 எம்பி ப்ரைமரி கேமரா எல்ஈடி ப்ளாஷ்ஸ 4 எக்ஸ் டிஜிட்டல் சூம் மற்றும் விஜிஏ முன்பக்க கேமராவும் இருக்கின்றது.

மெமரியை பொருத்த வரை 4ஜிபி இன்டெர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் இருக்கின்றதோடு ஆன்டிராய்டு 4.4 கிட்காட் மூலம் இயங்குகின்றது. லாலிபாப் அப்டேட் பற்றி எந்த தகவலும் அறிவிக்கப்படவில்லை.

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 2ஜி, மைக்ரோ யுஎஸ்பி வி2.0, ப்ளூடூத் வி4.0 மற்றும் வைபை ஆகியவை இருக்கின்றது. இதோடு இந்த ஸ்மார்ட்போன் வெள்ளை, மெட்டாலிக் க்ரே ஆகிய வண்ணங்களில் கிடைக்கின்றது.


Click it and Unblock the Notifications